நார்ச்சத்தில் நளபாகம்! பனீர் கோஸ் கறி
தேவையானவை: கோஸ் கால் கிலோ, பனீர் அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் தலா 1, உப்பு தேவையான அளவு, கடுகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ண...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_545.html
தேவையானவை: கோஸ் கால் கிலோ, பனீர் அரை கப், வெங்காயம், பச்சை மிளகாய் தலா 1, உப்பு தேவையான அளவு, கடுகு அரை டீஸ்பூன், சீரகம் கால் டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: கோஸ், வெங்காயம், பச்சைமிளகாயை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயுடன் நெய்யை கலந்து காயவைத்து கடுகு, சீரகம் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, நறுக்கி அலசிய கோஸை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, கோஸ் நன்றாக வதங்கியதும் பனீர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பனீர் கோஸ் கறி: கோஸில் நார்ச்சத்தும் வைட்டமின் களும் இருக்கிறது. கோஸ் சாப்பிடாத குழந்தைகள்கூட பனீரை சேர்த்துச் செய்த இந்த பொரியலை விரும்பி சாப்பிடுவர்.
Post a Comment