'குழந்தைகளுக்கு நாட்டு வைத்தியம்!

நாட்டு வைத்தியம்! 'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக...

நாட்டு வைத்தியம்! 'குழந்தைகளுக்கு ஒண்ணுன்னா குடும்பமே சோர்ந்து போயிரும். இதுக்காகத்தேன் கைவசம் எப்பவும் சில மூலிகை சாமான்களை வச்சிக்கிடணும். குழந்தைகளின் வாந்தி நிற்க.. வேலிப்பருத்திங்கிற உத்தாமணி இலைச் சாறுல ஒரு கைப்பிடி மிளகை 7 முறை ஊற வைக்கணும் (மிளகுல உத்தாமணிச் சாறை ஊத்தினா கொஞ்ச நேரத்துலயே அவ்வளவையும் உறிஞ்சிக்கிடும். இப்படி ஏழு முறை செய்யணும்). ஊறின மிளகை உலர்த்தி, பொடிச்சு வெச்சுக்கிடணும். இந்தப் பொடியிலருந்து ஒரு சிட்டிகை எடுத்து, அதுல 20லருந்து 40 மில்லி பால்.. இல்லேன்னா தேன் கலந்து கொடுத்து வந்தா, செரியாமை, வாந்தி, மந்தம் எல்லாம் ஓடிப் போயிரும். வாந்தி நிக்க இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு துண்டு வசம்பை நெருப்புல சுட்டு, கருக்கி, அதை ஒரு தேய் தேய்ச்சு, தேன்ல குழப்பி, ரெண்டு, மூணு முறை குழந்தைங்க நாக்குல தடவினா வாந்தி நின்னு, முழு குணம் கிடைக்கும். வயிற்று உப்புசம் குணமாக.. சுக்கு, சீரகம், சிறுபுள்ளடி (தரையில் படரும் செடி) எல்லாத்தையும் புளியங்கொட்டை அளவு எடுத்து நசுக்கி, தாய்ப்பால்ல ஊற வைச்சுப் பிழிஞ்சிக்கணும். இதை அரை பாலாடை அளவுக்கு எடுத்து, ஒருமுறை கொடுத்தாலே வயிற்று உப்புசம் சரியாகிடும். சிறுசா ஒரு துண்டு பிரண்டைய எடுத்து, அது மேல உப்பைத் தடவி, ஒரு ஓட்டுல வச்சி தீயில காட்டுனா, 'படபட'னு வெடிக்கும். இதை ஒரு டம்ளர் தண்ணியில போட்டு வச்சுக்கணும். குழந்தைகளுக்கு வயிறு உப்புசமா இருக்கிறப்ப இந்தத் தண்ணியில அரை பாலாடை கொடுத்தா, நல்ல பலன் கிடைக்கும். வயிற்றுப்போக்கு நிற்க.. சமையலுக்கு உபயோகிக்கிற மஞ்சளை ஒரு கணு (துண்டு) எடுத்துத் தூளாக்கி, சூடு பண்ற கரண்டி.. இல்லேன்னா கடாயில போட்டு வறுத்தா, தீ மாதிரி ஆயிரும். இதுல அரை ஸ்பூன் ஓமத்தைத் தூவினா அது வெடிக்கும். உடனே அரை டம்ளர் தண்ணி ஊத்திக் காய்ச்சி, வடிகட்டி, இதுலருந்து அரை பாலாடை அளவுத் தண்ணிய ஒருமுறை கொடுத்தாலே வயிற்றுப்போக்கு சரியாகிடும். வயிற்றுக்கடுப்பு நீங்க.. தாய்ப்பால்ல கடுக்காய்க் கொட்டையை இழைச்சி அரை பாலாடை வீதம் கொடுத்துட்டு வந்தா, வயிற்றுக்கடுப்போட கூடிய பேதி சரியாகிடும். ''குழந்தை நை நைனு அழுதுக்கிட்டே இருக்கு. டாக்டர்கிட்ட போயும் கேக்கல. எதாவது நாட்டு வைத்தியம் சொல்லுங்களேன்..'' என்று இன்றுவரை கிராமத்துப் பாட்டிகளிடம் வைத்தியம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாம்பார் சாதம் மாதிரி.. பருத்திப் புடவை மாதிரி.. இந்த நாட்டு வைத்தியமும் நம் ஊரில் எவர் கிரீன்தான். நமக்கு இங்கே நாட்டு வைத்தியம் தந்திருக்கிற அன்னமேரி பாட்டிக்கு இந்தத் துறையில் 60 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. கடலூர், சாமிப்பிள்ளை நகரைச் சேர்ந்த பாட்டியின் வீட்டைச் சுற்றிலும் காடு போல வளர்ந்து கிடக்கின்றன மூலிகைச் செடிகள். என்ன வியாதி என்றாலும் தீர்வு தேடி பாட்டியைத் தேடி ஓடி வருகிறார்கள் சுற்றுப்புற கிராமத்து ஜனங்கள். வைத்தியம் முழுக்க முழுக்க இலவசம்! ''காசா முக்கியம்? ஜனங்க நோய், நொடி இல்லாம சொகமா இருக்கணும். அதுதேன் முக்கியம்'' என்று மனசுக்குள்ளிருந்து பேசுகிற அன்னமேரி பாட்டிக்கு வயது 85! இதோ.. உங்கள் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறார் அன்னமேரி பாட்டி! மழை ஓஞ்சி இப்போ பனி அடிக்குதே.. இந்த சீஸனுக்கேத்த மருந்து சொல்றேன்.. குழந்தைகளின் சளிக்கு.. ஆடாதொடை இரண்டு இலை, தும்பைப்பூ 10 எண்ணிக்கை, தாளிசபத்திரி (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) கால் ஸ்பூன், இஞ்சி ஒரு துண்டு.. இதெல்லாத்தையும் நசுக்கி, சாறெடுக்கணும். இதுல 8 சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தையோட நாக்குல தடவி வந்தா, சளி கட்டுக்குள்ள வரும். பிறந்த குழந்தைகள் முதல் 2 வயசுக் குழந்தைகள் வரை இந்த மருந்தைத் தரலாம். பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சுச் சளிக்கு,, இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து. பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்குறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப் பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும். இருமல் விலக.. அதிமதுரம் 100 கிராம் எடுத்து நசுக்கி, 200 மில்லி தண்ணியில வெறுமனே ஊற வச்சு, காலையில எடுத்து வடிகட்டி, சூடாக்கி (கொதிக்க வைக்க தேவையில்லை) பனங்கற்கண்டு சேர்த்துக் குடிச்சு வந்தா இருமல் ஓடியே போயிரும் நாட்டு வைத்தியம்! அன்னமேரி பாட்டி 'பனி காலம் வந்தாப் போதும்.. இருமலும் சளியும் சிறுசுகளை சட்டுனு பிடிச்சுக்கிட்டு இம்சைப்படுத்தும். அந்த இம்சைகள வெரட்டுற மூலிகைகளப் பார்ப்போம் வாங்க.. குழந்தைகளின் இருமலுக்கு.. சின்ன துண்டு (ஒரு கணு) சித்தரத்தையும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டையும் ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சணும். ஒரு வேளைக்கு ஒரு பாலாடை (சங்கு) அளவு, இதை ஒருநாளைக்கு 3 இல்ல.. 4 வேளை கொடுத்துட்டு வந்தா வறட்டு இருமல் விலகும். மூணு மாச பச்சைக் குழந்தையிலருந்து ரெண்டு வயசுக் குழந்தைங்க வரைக்கும் இதக் கொடுக்கலாம். பல்லு மொளச்ச பிள்ளைகளுக்கு, நெய்யில 10 தூதுவளை இலைகள வதக்கி, (பெரியவங்கன்னா.. ஒரு கைப்பிடி இலை) அப்படியே மென்னு தின்ன வச்சா இருமல் அண்டாது! 10 உத்தாமணி இலைகள எடுத்து சாறு பிழிஞ்சிக்கணும். ஒரு பட்டாணி அளவு சுண்ணாம்புல இதைக் கலந்து தொண்டைக் குழியில தடவி வந்தா இருமல் 'சட்'டுனு நிக்கும். இருமலும் சளியும் வந்து மூச்சு விட முடியாம சில குழந்தைங்க திணறிப் போயிரும். இந்தக் கோளாறை 'தெக்கத்திக்கணை'னு சொல்லுவாக. இதுக்கு.. தூதுவளை இலைய கசக்கி, அதுல மூணு சொட்டு சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் தேன் கலந்து குழந்தைக நாக்குல தடவுங்க. நல்ல குணம் தெரியும். இலைகளை எடுத்த தூதுவளை குச்சிய (தண்டு) நல்லா காய வச்சு இடிச்சுப் பொடியாக்கி சலிச்சுக்கணும். இத காத்துப் புகாத டப்பாவுல போட்டு வெச்சிக்கிடுங்க. மிளகு அளவு இந்தப் பொடிய எடுத்து, தேனுல குழப்பி நாக்குல தடவுங்க. இப்படி 4 வேளை கொடுத்திட்டு வந்தா தெக்கத்திக்கணை சரியாப் போயிரும். நாட்டுக்கோழி முட்டையோட மஞ்சக் கருவை கரண்டில ஊத்தி, லேசான சூட்டுல காய்ச்சினா எண்ணெய் வரும். இதுல மிளகு அளவு கோரோசனை (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்) கலந்து இழைச்சு, உள்ளுக்குக் கொடுத்துட்டு வந்தா இருமல், கணை இழுப்பு குணமாகும். மூணு அங்குல இண்டந்தண்டை குச்சியை (இண்டு) ராத்திரியே ஒரு டம்ளர் தண்ணில ஊற வச்சு, காலையில தண்டை மட்டும் எடுத்து தண்ணி இல்லாம நல்லா துடைச்சிக்கணும். இது குழல் மாதிரி இருக்குறதால ஒரு பக்க துவாரம் வழியா ஊதினா அரை (அ) ஒரு ஸ்பூன் அளவுக்குத் தண்ணி வரும். இந்தத் தண்ணி கூட மிளகு அளவு கோரோசனை கலந்து காலையில வெறும் வயித்துல 3 நாள் தொடர்ந்து கொடுத்து வந்தா கணை இழுப்பு, சளி, இருமல்.. எல்லாம் ஓடியே போயிரும்.

Related

பொடுகுத் தொல்லை !! ஹெல்த் ஸ்பெஷல்!!

தலையில் அடிக்கடி அரிப்பு சொறிந்தால் தவிடுபோல், பொடித்த உப்பு போல் பொடி உதிருகிறது. உண்மையிலேயே டி.வி. யில் காட்டும் பொடுகு மருந்து விளம்பரங்களில், பொடுகை காண்பிக்க பொடி உப்பை தான் பயன்படுத்துகிற...

தேள்கடி விஷம் நீங்க...! இய‌ற்கை வைத்தியம்!

தேள்கடி விஷம் நீங்க... சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும். 20 மிளகை எடுத்து தேங்காயுட...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:04:4 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,052

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item