கடன் - எச்சரிக்கை கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...

கடன் - எச்சரிக்கை கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே மா...

கடன் - எச்சரிக்கை கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசரத் தேவைக்காக நாம் கடன் வாங்கும்போது பல விஷயங்களைப் பார்ப்பதே இல்லை. வங்கியிலோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலோ கடன் பெறும்போது அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுவிட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்வது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. இதிலிருந்து தப்பிக்க கடன் வாங்கும்போதும், கடனை கட்டி முடித்த பிறகும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணனிடம் கேட்டோம். கடன் திரும்பச் செலுத்தியவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய விஷயங்களை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர். கடன் வாங்கும் முன்...! ''எந்த விதமான கடன் வாங்கப் போனாலும் சரி, அந்தக் கடன் தொகைக்கான வட்டி எவ்வளவு? திருப்பி செலுத்துவதற்கான காலம் எவ்வளவு, முன்கூட்டியே கட்டினால் அபராதம் உண்டா? இருக்கிறது என்றால் எத்தனை சதவிகிதம் என்பது போன்றவற்றை எழுதி வாங்கிக் கொள்வது அவசியம். கடன் கொடுக்கும் போது எழுதி வாங்கப்படும் கடனுறுதி சீட்டு எனப்படும் பிராமிசரி படிவத்தில் கடனுக்கான வட்டி, திரும்பச் செலுத்தும் காலம், கடன் தொகை போன்றவை சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதைப் பரிசோதித்த பிறகே கையெழுத்துப் போட வேண்டும். கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை வங்கியிடமிருந்து உரிய அதிகாரியின் கையெழுத்து மற்றும் வங்கியின் முத்திரையுடன் பெற்றுக் கொள்வது அவசியம். வங்கியில் பிராமிசரி படிவத்தை திருப்பித் தரமாட்டார்கள். ஆனால், அதன் மீது 'ரத்து செய்யப்பட்டுவிட்டது' என்று எழுதி வங்கி அதிகாரி கையெழுத்திட்டு வைத்துக் கொள்வார்கள். இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு கடன் தொடர்பான ஆவணங்களையும், திரும்பச் செலுத்தியதற்கான ஆவணங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வாருங்கள். பிரச்னை என்றால் கையிலிருக்கும் ஆவணங்கள் நிச்சயம் உதவும்'' என்றவர், மேலும் கவனிக்க வேண்டிய சிலவற்றையும் அடுத்து விளக்கினார். கடன் வாங்கிய பிறகு...! ''வாகனக் கடன் வாங்கும்போது வங்கியின் பெயரில் ஆர்.சி. புக் இருக்கும். கடனைத் திருப்பிச் செலுத்திய பின்பு உங்களது பெயருக்கு ஆர்.சி. புக்கை மாற்றி வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நீங்கள் வாங்கிய கடனை பதிவு செய்து இருப்பார்கள். கடனைத் திரும்பச் செலுத்தியதற்கான சான்றிதழை வங்கியில் இருந்து பெற்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வாகனத்தின் மீது இருக்கும் கடன் ரத்தாகும். மனை, வீட்டுப் பத்திரம் போன்ற அசையாச் சொத்துக்களின் ஆவணங்களை அடகு வைத்திருந்தால் கடனை முழுவதும் திரும்பச் செலுத்திய பிறகு ஆவணங்களைச் சரிபார்த்து வாங்கிக் கொள்ளும் அதே நேரத்தில், கடன் பாக்கி இல்லை என்பதற்கான சான்றிதழ் மற்றும் வங்கிக்கு இனி அந்த சொத்து மீது எந்த உரிமையும் இல்லை என்பதற்கான சான்றிதழையும் (liability certificate) வாங்கிக் கொள்வது அவசியம். மேலும், அடமானக் கடனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான ரசீதை வங்கியிலிருந்து பெற்றுக் கொண்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் அடமானத்தை ரத்துச் செய்யவேண்டும். நகையை அடகு வைக்கும்போது நகையின் எடையை மதிப்பிட்டு வாங்கும் வங்கிகள் நகையைத் திருப்பும்போது எடை போட்டுத் தருவதில்லை. நகையின் எடை குறைய வாய்ப்பிருப்பதால் நகையை திருப்பும் போதும் எடை போட்டு வாங்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இதை யாரும் செய்வதில்லை. என்னென்ன நகைகளை அடகு வைத்திருக்கிறோம் என்பதை இரு தரப்பினரும் தெளிவாக எழுதி வைத்துக் கொள்வதும் நல்லது'' என்றார். மஞ்சள் கடுதாசி... சிலர் ஆ..ஊ.. என்றால் மஞ்சள் கடுதாசி கொடுத்திருவேன் என்று மிரட்டல் தொனியில் சொல்வதுண்டு. ஆனால் உண்மையில் மஞ்சள் கடுதாசி கொடுக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் கஷ்டங்கள் என்னவென்று. மஞ்சள் கடுதாசி என்ன சூழ்நிலைகளில் கொடுக்கப்படும்? அதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து மீள என்ன வழி? என்கிற கேள்விகளுக்கான பதில் முக்கியமானவை. பலருக்கும் தெரியாதவை. கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை, கடன் காரணமாக ஊரைவிட்டு ஓடிவிடுவது, என்னால் கடனைத் திரும்பச் செலுத்த இயலாது என கடன்பட்டவருக்கு கடிதம் போடுவது போன்ற காரணங்களால் 'ஆக்ட் ஆஃப் இன்சால்வன்சி' சட்டத்தின்படி அவரை நீதிமன்றம் நொடிந்தவர் என்று அறிவிக்கும். நீதிமன்றம் அப்படி அறிவித்த அன்றையத் தேதி வரை அவருக்குள்ள கடன்களை, அவர் பெயரில் உள்ள எல்லா சொத்துகளையும் ஜப்தி செய்து, கடன் கொடுத்தவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும். அதன்பின் நீதிமன்றத்தில் தன்னை டிஸ்ஜார்ஜ் செய்யச் சொல்லி மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் மனு செய்ய வேண்டும். நீதிமன்றமானது, மஞ்சள் கடுதாசி கொடுத்தவரை அதிலிருந்து விடுவித்துவிட்டால் பிறகு அவர் புது வாழ்கையை ஆரம்பிக்கலாம்; புதிய தொழிலும் தொடங்கலாம். அவரை பழைய கடன் ஏதும் தொடராது. ஆனால் வங்கியிலோ, சமுதாயத்திலோ நொடிந்தவர் என நீதிமன்றம் அறிவித்தவருக்கு உரிய மரியாதை கிடைப்பது கஷ்டம். வங்கியில் கடன் கிடைப்பது போன்ற விஷயங்களில் சிக்கல் ஏற்படும். எனவே தேவைக்கு மீறி கடன் வாங்கி அவஸ்தைப்படுவதை விட்டு கடனை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி இது போன்ற சிக்கலில் மாட்டாமல் இருப்பதே புத்திசாலித்தனம். Thanks

Related

குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்? உங்களுக்கு உதவும் சட்டங்கள்!

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை" அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்க...

Stamp Duty and Registration fee for Tamil nadu State

Categories of Document Stamp Duty    Registration Fee 1 Conveyance...

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி? -- உபயோகமான தகவல்கள்,

கேஸ் இணைப்பு... பெயர் மாற்றம் செய்வது எப்படி? கேள்வி-பதில் ?எனது மகளின் பெயரில் கேஸ் இணைப்பு வாங்கி இருந்தோம். இப்போது என் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அந்த இணைப்பை ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:03:43 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,052

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item