குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..! குங்குமப் பூவின் மகிமைகள் இங்கே

குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..! மலரினும் மெல்லிய, செக்கச்செவேல் நிறத்தில் இருக்கும் குங்குமப்பூ, தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கும் விஷ...

குங்குமப்பூவே... கொஞ்சும் அழகே..! மலரினும் மெல்லிய, செக்கச்செவேல் நிறத்தில் இருக்கும் குங்குமப்பூ, தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அதி அற்புதமானவை. 'குங்குமப்பூவே... கொஞ்சு புறாவே..' என்ற பாட்டை வைத்தே குங்குமப்பூவின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அதன் விலை மிக மிக அதிகமாக இருக்கிறது என்றாலும், அது தரும் அழகுப் பலன்களோ ஏராளம். கவர்ந்திழுக்கும் கலரையும், மயக்கும் அழகையும் ஒருங்கிணைத்துத் தருவதில் குங்குமப்பூவுக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். குதூகல அழகை அள்ளித் தரும் குங்குமப் பூவின் மகிமைகள் இங்கே... குங்குமப்பூ கீறல்-10 எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, இதனுடன் 2 டீஸ்பூன் மில்க் பவுடர் கலந்து, சின்ன அம்மியில் அரைத்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். 'பளிச்'சென முகம் பிரகாசமாக ஜொலிக்கும். குங்குமப்பூ ஸ்க்ரப் ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும். சந்தனத்தூள், செம்மரத்தூள் தலா அரை டீஸ்பூனுடன், 5 குங்குமப்பூ கீறலை தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் 2 முறை முகம், கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகத்தில் உள்ள கருந்திட்டுக்கள், கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைந்து முகம் ஒரே மாதிரியான நிறத்தில் மின்னும். 2 டீஸ்பூன் பாலில், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பைப் போட்டு ஊறவையுங்கள். இதனுடன் 10 குங்குமப்பூ கீறலை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொய்ந்த முகத்தை தூக்கி நிறுத்தி, 'டல்'லான முகமும் டாலடிக்கும். 10 குங்குமப்பூ கீறலுடன் 4 பாதாம்பருப்பை முந்தைய நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் விழுதாக அரைத்து முகத்தில் பூசி 'பேக்' போட்டு பத்து நிமிடம் கழித்து தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதுபோல் செய்துவர முகம் பளபளப்புடன் இழந்த அழகை மீட்டுத் தரும். கால் கப் குங்குமப்பூவை முந்தைய நாளே வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் அதை அரைத்து முகத்தில் பத்து போல் போட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவுங்கள். இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் கண்ணின் கீழ் கருமை, கரும்புள்ளிகள், திட்டுக்கள் எல்லாம் மறைந்து, முகம் அன்று மலர்ந்த தாமரையாகப் பூத்துக் குலுங்கும். நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளுடன், குங்குமப்பூ கீறல்-15 சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். வாரம் இருமுறை தடவிவர பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். மேலும் வராமல் தடுக்கும். பூப்பெய்த வைக்கும் குங்குமப்பூ! கர்ப்பிணி பெண்கள் எட்டாம் மாதத்தில் தினமும் 2 குங்குமப்பூ கீறலை காய்ச்சிய பாலில் கலந்து குடித்து வர, இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். பிரசவ வலி வந்தும் குழந்தை வெளியில் வராமல் இருக்கும்போது, 4 கிராம் குங்குமப் பூவை பாலில் கரைத்து குடிக்கக் கொடுத்தால் உடனடியாக சுகப்பிரசவம் ஆகும். வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வாயும் மணக்கும். குழந்தை பிறந்ததும், 3 கிராம் குங்குமப்பூவை தண்ணீர் விட்டு அரைத்து, உருண்டையாக செய்து சாப்பிட, வயிற்றில் உள்ள தேவையில்லாத கசடுகள் வெளியேறும். உடல் சூட்டினால் சிலருக்கு ஆசனவாய் புண்ணாகியிருக்கும். குங்குமப்பூவை தேன் சேர்த்து அரைத்து தடவினால், குணமாகும். சிறிது குங்குமப்பூவில் தாய்ப்பால் விட்டு அரைத்து கண்களில் விட்டால், கண்வலி குணமாகும். அல்சரினால் குடல் புண்ணாகி வெந்து போயிருக்கும். காய்ச்சிய பாலில் 4 குங்குமப்பூ கீறலை சேர்த்து ஒரு மண்டலம் குடித்து வர, புண் ஆறிவிடும். 25 வயதை எட்டியும் பருவம் எய்தாத பெண்களுக்கு தினமும் பாலில் குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால் ஆறே மாதத்தில் பூப்படைந்துவிடுவர்.

Related

காமாலையை விரட்டும் கரிசலாங்கண்ணி!

காமாலையை விரட்டும் கரிசலாங்கண்ணி ஆர்.எஸ்.இராமசுவாமி தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமம் கரிசலாங்கண்ணி கீரைக்கு கையாந்தகரை, கரிசாலை, கையான், பிருங்கராஜம் என, நான்கு வ...

கற்பக மூலிகை - தூதுவளை

                                 ...

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர்!

வெய்யிலை வெல்லும் வெட்டிவேர் காயத்ரி சித்த மருத்துவர் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், ஒட்டுமொத்த உடலும் உஷ்ணமாகிவிடக்கூடும். சிவந்த கண்களும், வறண்ட தோலும், கரகரத் தொண்டையுமாக அவத...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:11:47 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,055

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item