அழகே... ஆரோக்கியமே.. (9) பளபள தோலுக்கு பாதாம் வைத்திய

அழகே... ஆரோக்கியமே.. (9) பளபள தோலுக்கு பாதாம் வைத்தியம்! நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, 'மெனோபாஸ்' சமயத்தில் (மாதவிடாய் நிற...

அழகே... ஆரோக்கியமே.. (9) பளபள தோலுக்கு பாதாம் வைத்தியம்! நாற்பது வயதைக் கடக்கும் பெண்களுக்கு, 'மெனோபாஸ்' சமயத்தில் (மாதவிடாய் நிற்கும் போது) ஈஸ்ட்ரோஜன் சுரப்புக் குறைவதால், உடலில் பல மாற்றங்கள் நிகழும். உடலின் கொழுப்புச் சத்து குறைவதால், சருமத்தில் எண்ணெய் பசையே இல்லாமல் வறண்ட பாலைவனமாகிவிடும். மேலும், 'கொலஸ்ட்ரால் வருமோ' என்ற பயத்தில் உணவிலும் எண்ணெய் பதார்த்தங்களை அறவே ஒதுக்கிவிடுவதும் வறட்சிக்கு வழிவகுக்கும். இதனால், தோலில் சுருக்கம் அதிகமாகி, கூடுதலான வயோதிக தோற்றம் வந்து சேரும். இந்த வறட்சியினால் கண்கள், கன்னம், கை, கால், முழங்கைப் பகுதிகள் சுருங்கி, தோல் தொய்ந்துவிடும். உணவு மற்றும் சருமப் பராமரிப்பு மூலமும் சருமத்தை பளபளப்பாக மாற்ற முடியும். கும்மென்றிருந்த கன்னம், வயோதிகம் காரணமாக ரொம்பவே தளர்ந்து போகும். இதற்கு, தினமும் 4 பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து, ஒரு கப் பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். இரவில் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் கசகசா தூளை கலந்து குடித்து வரலாம். மன நிம்மதியான உறக்கத்துடன் சருமமும் மிருதுவாக மாறும். கை, கால்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு, இளமையிலிருந்த அழகு, கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும்போது... தலா 25 கிராம் கசகசா, வெள்ளரி விதையுடன் 10 கிராம் பாதாம்பருப்பை சேர்த்து அரையுங்கள். அந்த விழுதை, கால் கிலோ நல்லெண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி இறக்குங்கள். இந்த எண்ணெயை உடம்பில் தினமும் தடவி வர, இழந்த பொலிவு மீண்டும் வந்து சேரும். தோலில் அரிப்பு இருந்தால், சிறிது விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் - ஈ குறைபாட்டினால் கண்களுக்கு கீழ் கருமை படரலாம். எண்ணெய் பசையில்லாமல் பொரி பொரியாக தோன்றி, கண் இமைகளுக்கு நடுவில் நிறைய சுருக்கங்கள் ஏற்படலாம். இந்தப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், பியூட்டி பார்லரில் த்ரெட்டிங் செய்து கொள்வதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். இல்லையென்றால்... கண் அழகு மட்டுமல்ல, பார்வையும்கூட பாதிக்கப்படலாம். பனிக்காலத்தில் வறண்ட சருமம் மேலும் வறட்சிப் பாதையில் போய், உள்ளங்கையில் சொரசொரப்பு, பாதங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தினமும், இரவு தூங்கப்போகும்போது கை, கால்களை நன்றாக கழுவி விட்டு, ஸ்டாக்கிங் டைப் சாக்ஸ் அணிந்து கொள்வது தோலை மென்மையாக வைத்திருக்கும். பொரியல், கூட்டு, சாம்பார் உணவு வகைகளில் கசகசாவை சேர்த்துக் கொள்வதும் சருமத்தின் எண்ணெய் பசையை கூட்டும். 50 கிராம் கசகசாவை வறுத்து, சம அளவு சர்க்கரை, பாதாம் 25 கிராம் சேர்த்து பொடியுங்கள். ஒரு கப் பாலில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் கலந்து குடித்துவர, ஒட்டுமொத்த சரும வறட்சியும் சட்டென மறையும்.

Related

பிரஸ் அப்ஸ் பயிற்சி--ஹெல்த் ஸ்பெஷல்

நாற்காலியின் இரு கைப்பிடிகளையும். படத்தில் காட்டியவாறு பிடித்துக் கொண்டு மாறி மாறி அமர்ந்து எழ வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் நாற்காலியில் அமர்ந்து விடக்கூடாது. இந்தப்பயிற்சியால் கைகளின் பி...

தசைப்பயிற்சி--ஹெல்த் ஸ்பெஷல்

இந்த பயிற்சி பின்புறம் தசைப்பகுதி வலுவாக செய்யப்படுகிறது. நீர் நிறைந்த இரண்டு பாட்டில்களை கைக்கு ஒன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும். அருகில் ஒரு நாற்காலியை வைத்து பின்னர் வலது காலைப் பின் பக்கமாக ம...

தாயாவதை தடுக்கும் பி.சி.ஓ.எஸ் நோயை கட்டுப்படுத்த--ஹெல்த் ஸ்பெஷல்

பூப்படைந்து சில வருடங்கள் ஆனதும் `ஸ்கேன்' செய்து பார்க்க வேண்டும். பார்த்தால், சினைப்பையில் கட்டிகள் இருந்தால் தெரிந்து விடும். 30 சதவீதம் பெண்களுக்கு கட்டிகள் இருக்கலாம். ரத்தப்பரிசோதனை மூலம் ஆண்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:03:54 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,052

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item