ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில

மழை நாளாக இருப்பதால், மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உ...

மழை நாளாக இருப்பதால், மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உள்ளது. * தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் இரண்டு உருளைக் கிழங்குகளைத் தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால், பொன்னிறமாக மிருதுவாக இருக்கும். * தரையைத் துடைக்கும்போது வாரத்தில் ஒருநாள், தண்ணீரில் உப்பு போட்டுத் துடைக்கவும். மற்றொரு நாள் மண்ணெண்ணெய் சில துளிகள் சேர்த்துத் துடைத்தால், தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும். * குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கியவுடன், டெட்டால் கலந்த நீரில் அலசிய பிறகே, அணிவிக்க வேண்டும். ரேஷஸ், அரிப்பு போன்ற தொல்லைகள் வர வாய்ப்பிருப்பதால், அதை முன்கூட்டியே தவிர்க்கலாமே! * முடி கொட்டுகிறதா? வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வர செழித்து வளரும். * விருந்தின்போது வெற்றிலைப் பாக்குத் தட்டில் இருக்கும் பாக்குப் பொட்டலங்களை, கையால் பிரிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். ஒரு சிறிய கத்திரிக்கோலை, அந்தத் தட்டில் வைத்தால் சௌகரியமாக இருக்கும். * மூலநோயால் அவதிப்படுகிறீர்களா? துத்தி இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள். நாற்பது நாள் தொடர்ந்து, காலையில் குடித்து வந் தால் மூலநோய் குண மாகும். * ஜாதகம், நியூமராலஜி எல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைப்போம். அந்தப் பெயரை சிதைக்காமல் முழுமையாக அழைத்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும். * உலர்ந்த பச்சைப் பட்டாணியை பவுடராக்கவும். ஒரு டீஸ்பூன் மாவில் பன்னீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் பூசவும். காய்ந்ததும் கழுவ, முகம் பளிச்சிடும். * சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி அரை கப் சாதத்தில் பிசைந்து சூட்டோடு சாப் பிடுங்கள். மலச்சிக்கல், மூலம் போன்றவைக் கட்டுப்படும். * ஏ.சி.வைத்திருப்பவர்கள் அவ்வப்போது தூசி படிதல், கேஸ் லீக் பிரச்னைகளைக் கவனித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பழுதாவ தோடு விபத்து ஏற்படவும் வாப்புண்டு. * இரவு படுக்கப் போகும் முன்பு கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்களை, பசும்பாலுடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, குடிக்கவும். நல்ல சக்தி கிடைக்கும். சத்து அதிகமுள்ள பானம் இது. * ஓமத்தை இலேசாக வறுத்து, அத்துடன் அரைப் பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து, கொட்டைப் பாக்களவு காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும். * காலை எழுந்தவுடன் இருக்கும் சுறுசுறுப்பு மதியம் இருக்காது. எனவே, காலை எழுந்தவுடன் கடினமான வேலைகளை முடித்து விட்டால், இலகுவான வேலைகளை மதியத்துக்கு மேல் செயலாம். * சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றலை வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இதில் உள்ள அதிகப்படியான உப்பு, மண் உதிர்ந்துவிடும். எண் ணெயில் வறுக்கும்போது அதிக கசடும் வராது. * ஃபேக்ஸ் மூலம் டாகுமெண்ட் வந்தால் அதனை உடனே நகல் எடுத்து வைக்க வேண்டும். ஃபேக்ஸ் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும்

Related

கிச்’ டிப்ஸ் பளிங்கு பொருட்கள் பளிச்சிட!

கிச்’ டிப்ஸ் பளிங்கு பொருட்கள் பளிச்சிட! பிளவர் வாஷ், தேனீர் கோப்பை, தண்ணீர் டம்ளர் போன்ற கண்ணாடி மற்றும் பளிங்கினால் ஆன பொருட்களை பயன் படுத்தினால் அதன் அழகே தனிதான். ஆனால் அந்த பளிங்கு பொருட்களை தொ...

சமையல்குறிப்புக்கள்-டிப்ஸ்!

சுண்டல் முதலிய அயிட்டங்கள் செய்ய பட்டாணி, கொண்டக்கடலை, மொச்சை போன்றவற்றை ஊறவைக்க மறந்து விட்டீர்களா? கவலை வேண்டாம். ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றாமல் கடலை வகைகளை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பக...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:31:2 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,057

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item