முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை வரம்!

முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை வரம்! அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கல...

முகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு! இயற்கை தரும் இளமை வரம்! அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 5 துளி தேன், ஒரு டீஸ்பூன் பார்லி பவுடர் கலந்து, முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். எலுமிச்சைச் சாறு முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். பார்லி பவுடர் சேர்ப்பதால் முகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பளிச்சென்று பிரகாசிக்கும். ஜுரம், தூக்கமின்மையால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்குகிறது எலுமிச்சை. 2 டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, இது கலக்கும் அளவுக்குப் பாலை விட்டு பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கண்ணுக்குக் கீழ் பூசி, காய்ந்ததும் கழுவுங்கள். கருவளையத்தைப் போக்கி, நல்ல நிறத்தைத் தருவதுடன் சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் இந்த சிகிச்சைக்கு உண்டு. இளம் வயதிலேயே சிலருக்கு தோல் தொங்கி வயதான தோற்றத்தைத் தரும். இதற்கு அருமையான வைத்தியம் இருக்கிறது எலுமிச்சையில். தோல் சீவி, துருவிய உருளைக்கிழங்கு - அரை கப், எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன், சிவப்பு சந்தனம் - ஒரு டீஸ்பூன்.. இந்த மூன்றையும் சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். முகத்தை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும். 'நேச்சுரல் ஃபேஸ் பேக்' செய்யும் விதத்தைச் சொல்லட்டுமா? எலுமிச்சை இலை - 4, பயத்தம்பருப்பு, தயிர் - தலா ஒரு டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - அரை டீஸ்பூன் ('ஃபேஸ் பேக்' போடுவது ஆணுக்கு எனில், கஸ்தூரி மஞ்சளுக்கு பதிலாக சந்தனத் தூள் - அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்), இவற்றை நன்றாக அரைத்தால் கிடைப்பதுதான் 'நேச்சுரல் ஃபேஸ் பேக்'. இதை முகத்துக்கு 'பேக்' ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்துக் கழுவினால், அன்று மலர்ந்த தாமரை போல் முகம் ஜொலி ஜொலிக்கும். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் எலுமிச்சை! 2 எலுமிச்சம் பழங்களின் சாறில் 2 டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வையுங்கள். இதனுடன் கொட்டை நீக்கிய புங்கங்காயைச் சேர்த்து அரையுங்கள். இந்த விழுதை வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பட்டுப் போல மென்மையாகவும் சுத்தமாகவும் இருக்கும். தலையில் எண்ணெய் தடவினால், தலை முடி பிசுபிசுத்து, முகத்தில் எண்ணெய் வடிகிறதா? இந்தப் பிரச்னைக்கும் தீர்வு உண்டு எலுமிச்சையில்! ஒரு கை அளவு தேங்காய் எண்ணெயில் 2 துளி எலுமிச்சைச் சாறை குழைத்து தடவுங்கள். எண்ணெய் தேய்த்த தலை போலவே இருக்காது. கூந்தலும் பளபளப்படையும். பருக்களால் முக அழகே கெட்டு விடுகிறது என்று கவலைப்படுகிறீர்களா..? 4 துளசி, 4 வேப்பந்தளிர், கடலை மாவு - ஒரு டீஸ்பூனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை பருக்களின் மேல் போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி, பருக்கள் மறையும். அடுத்து பருக்களே வராது. டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு அருமையான சிகிச்சை இது. பற்களை பளிச்சிட வைக்கிறது எலுமிச்சைச் சாறு. உப்புத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரைத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடித்த கற்பூரம் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 4 துளி, வேப்பந்தூள் - அரை டீஸ்பூன்.. இவற்றைக் கலந்து வாரம் 2 முறை பல் தேய்த்து வந்தால் ஈறு வலுவடைவ துடன் பற்களில் உள்ள காரையும் மறையும். இந்த பவுடரை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித் தால், வாய் துர்நாற்றமும் இருக்காது. வியாதிகள் போக்கும் எலுமிச்சை மலையேறும்போது போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கையோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் கொண்டு போகலாம். எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சுவாசம் சீராகும். எலுமிச்சையில் 84.6% நீர்ச் சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது. எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும். முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்னை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள 'விட்டமின் சி' சத்து உதவுகிறது. எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும். வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க் கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட.. பூரண குணம் கிடைக்கும். பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும். மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால்.. விரைவில் குணமடைவார்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள். பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும்.

Related

கோடையின் வெம்மையைத் தவிர்க்க நன்னாரி

கோடையின் வெம்மையைத் தவிர்க்க நாம் பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறோம். குளிர்பானங்கள், பழச்சாறுகள் ஆகியவை கோடையின் உக்கிரத்தை தணிக்க உதவுகின்றன. வெம்மையால் ஏற்படும் உடல்சூடு, தலைவலி, வேர்க்குரு, வேனல்க...

வீணாக கிடக்குதா புதினா?:

வீணாக கிடக்குதா புதினா?: புதினாவை அதிகம் வாங்கி விட்டு அல்லல்படுவதை விட, அதிகமாக இருக்கும் புதினாவில் இலையை மட்டும் தனியாக எடுத்து, கல் உப்பு போட்டு கசக்கி அதைப் பற்களில் தினமும் நன்றாகத் தேய்த்தால்,...

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரை ! அற்புத நோய் நிவாரணி!

கரிசலாங்கண்ணி மூலிகைக் கீரைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மருத்துவத்தில் மிகச் சிறப்பான இடம் இருந்தது. பல்லவர்கள் ஆண்ட காலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கரிசலாங்கண்ணியைப் பயிரிட முடியாது ஆண்டுதோறும் அ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:11:38 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,055

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item