மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய

நாட்டு வைத்தியம் மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல முழுமை...

நாட்டு வைத்தியம் மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.. வராம போனாலும் விபரீதம்தான். இதுக்கு மூலிகை வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு.. கேட்டுக்கிடுங்க.. ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறை சரிசெய்ய.. அம்பது கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடிச்சி.. அதோடகூட அம்பது கிராம் பனைவெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதுல நெல்லிக்காய் அளவு எடுத்து, கால, மால ரெண்டு வேளைக்கு வாயில போட்டு தண்ணி குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு சீராயிரும். 100 கிராம் சதக்குப்பையை (நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும்) பொன் நிறமா வறுத்து.. அதோடகூட 100 கிராம் பனை வெல்லத்தைக் கலந்து வச்சிக்கணும். இதையும் முன்னால சொன்ன மாதிரி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு, தண்ணி குடிச்சி வந்தா மாதவிடாய்க் கோளாறு சரியாயிரும். மாதவிடாய்க் கோளாறோட வயித்துவலி, வயித்துப் புண் வந்து இம்சைப்படுத்தும். இதுக்கு, ரெண்டு கைப்பிடி குப்பைமேனிக் கீரையை எடுத்து வேக வச்சி கடைஞ்சி சாப்பிட்டு வந்தா வயித்துவலி, வயித்துப் புண்ணெல்லாம் விருட்டுனு ஓடிப் போயிரும். அதிக ரத்தப்போக்கை நிறுத்துறதுக்கு.. ரத்தப்போக்கால அவதிப்படுறவுங்களுக்கு அருமையான வைத்தியம் இது. காடு மேடுல அங்கங்க வெளைஞ்சி கெடக்குற நாயுருவி இலையை எடுத்துக்கணும். இதை நல்லா இடிச்சி 100 மில்லி அளவுக்கு சாறு எடுக்கணும். பிறகு, இதோட ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 3 நாளைக்குக் காலை ஒரு வேளை மட்டும் வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா ரத்தப்போக்கு உடனே சரியாயிரும். இதைக் குடிச்ச பிறகு ஒன்னரை மணி நேரம் கழிச்சித்தான் எதுவுமே சாப்பிடணும். வெள்ளைப்படுதல் நிற்க.. வெள்ளைப்படுதல் இருந்தா பொண் ணுங்களுக்கு பெரும் அவஸ்தைதான். 10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி பண்ணி வச்சிக்கணும். அதோடகூட 5 டீஸ்பூன் தேன் கலந்து தெனமும் ரெண்டு வேளை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தாப் போதும். வெள்ளைப்படுதல் முழுமையா குணமா கிடும். இதேபோல.. காய்ஞ்ச அசோகப்பட்டையை எடுத்து நல்லா இடிச்சிக்கணும். இந்தத் தூளை 10 கிராம் எடுத்து 200 மில்லி தண்ணியில போட்டு, 100 மில்லி ஆகுற அளவு கொதிக்க வச்சி இறக்கணும். இதுல 25 மில்லி எடுத்து தெனமும் ரெண்டு வேளை குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுதல் பூரணமா குணமாகிடும். நாட்டு வைத்தியம் மாதவிடாயின்போது பெண்கள் படற வேதனை சொல்லி மாளாது. வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல்னு அதுல எத்தனையோ கஷ்டம் இருக்கு. இதுக்கெல்லாம் நாட்டு வைத்தியத்துல நல்ல நிவாரணம் இருக்கு. பார்க்கலாமா.. வெள்ளைப்படுதல் வராம தடுக்க.. அஞ்சு ஆனைநெருஞ்சில் இலைகள எடுத்து, ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசறப்ப 'கொழ கொழ'னு வரும். இத காலையில வெறும் வயித்துல மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுறது சரியா போயிரும். இதைக் குடிச்சி 2 மணி நேரம் கழிச்சிதான் சாப்பிடணும். சாப்பாட்டுல புளி சேர்க்கக் கூடாது. நாக்குக்கு புளிப்பு வேணும்னா, தக்காளிய சேர்த்துக்கலாம். ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலைய எடுத்து ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசுனா 'கொழகொழ'னு வரும். முன்னமே சொன்ன மாதிரி இதை காலைல வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். சாப்பாட்டுல புளிக் குப் பதிலா தக்காளி சேர்க்கலாம். வெள்ளைப்படுறது முழுசா குணமாகும். அத்திக்காயை துவரை.. இல்லைன்னா பாசிப்பருப்போட சேர்த்து கூட்டு செஞ்சி சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சீக்கிரமே குணமாயிரும். ரத்தப்போக்கு நிக்கிறதுக்கு.. மேல்தோல் நீக்கிய நாவல்பட்டை (சிவப்பா இருக்கும்) 50 கிராம்.. (அ) அதே அளவுல அத்திப்பட்டை எடுத்து, அரை டம்ளர் அளவுக்கு சாறு வர்றவரைக்கும் தயிர் சேர்த்து இடிச்சிக்கணும். இதைக் காலையில வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். ஆனைநெருஞ்சில் இலைக்கு சொன்ன அதே பத்தியம்தான் இதுக்கும். மாதவிடாயின்போது வர்ற வயித்துவலிக்கு.. ஒரு கைப்பிடி மலைவேம்பு தழைய எடுத்து அதோடகூட தயிர் சேர்த்து அரை டம்ளர் சாறு வர்ற மாதிரி நல்லா இடிச்சிக்கணும். தொடர்ந்து இதை மூணு நாள் காலையில வெறும் வயித்துல குடிக்கணும். வயித்துவலி விருட்டுனு ஓடிரும். கன்னு போடாத கிடாரியோட கோமியம் 200 மில்லி எடுத்து, இதுகூட புளியங்கொட்டை அளவு உப்பு சேர்த்து காலையில வெறும் வயித்துல குடிக்கணும். மாதவிடாய் வந்த மூணாவது நாள் குடிச்சா வயித்து வலி சரியாயிரும். சரியாகலைன்னா அடுத்த மாசம் குடிக்கணும். இந்த வைத்தியம் வயித்து வலிய மட்டுமில்ல.. மஞ்சள்காமாலை நோயையும் குணமாக்கிரும். வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி ! மாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இருக்கணும். கூடவே, நாஞ்சொல்ற மருந்துங்களையும் பக்குவமா தயார் பண்ணிச் சாப்பிட்டா... எல்லா பிரச்னையும் பஞ்சா பறந்துடும். வெள்ளைப்படுதல் சரியாக... ஆனைநெருஞ்சில் பத்தி கேள்விப்-பட்டிருப்-பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து, ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல கொழகொழப்பா வரும். அதை அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும் வயித்துல தொடர்ந்து மூணுநாள் குடிச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது. வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி, அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும். தாமதமான மாதவிடாய்... சில பொண்ணுங்களுக்கு மாதவிடாய் ஒழுங்கா வராம ஒரு வழி பண்ணிரும். அப்படிப்பட்டவங்க பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதோட மிளகு 5 சேர்த்து காலையில வெறும் வயித்துல மென்னு தின்னணும். மூணு முதல் அஞ்சு நாள் சாப்பிட்டு பாருங்க... ஒழுங்கா மாதவிடாய் வரும். மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து-தான். அதை மையா அரைச்சி நெல்லிக்-காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும். சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, 3 பாகமாக்கி வச்சிக்கிடணும். ஒரு பாகத்தை ரெண்டா பிரிச்சி, காலையிலயும், சாயங்காலமும் சாப்பிடணும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக்கணும். இப்பிடி மூணுநாள் சாப்பிட்டாலே வராத மாதவிடாய் வந்துடும். கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும். மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு... வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும். கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும். நாட்டு வைத்தியம் மாதவிடாயின்போது பெண்கள் படற வேதனை சொல்லி மாளாது. வயித்துவலி, அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல்னு அதுல எத்தனையோ கஷ்டம் இருக்கு. இதுக்கெல்லாம் நாட்டு வைத்தியத்துல நல்ல நிவாரணம் இருக்கு. பார்க்கலாமா.. வெள்ளைப்படுதல் வராம தடுக்க.. அஞ்சு ஆனைநெருஞ்சில் இலைகள எடுத்து, ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசறப்ப 'கொழ கொழ'னு வரும். இத காலையில வெறும் வயித்துல மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா வெள்ளைப்படுறது சரியா போயிரும். இதைக் குடிச்சி 2 மணி நேரம் கழிச்சிதான் சாப்பிடணும். சாப்பாட்டுல புளி சேர்க்கக் கூடாது. நாக்குக்கு புளிப்பு வேணும்னா, தக்காளிய சேர்த்துக்கலாம். ஒரு கைப்பிடி கட்டுக்கொடி இலைய எடுத்து ஒரு டம்ளர் தண்ணியில போட்டு அலசுனா 'கொழகொழ'னு வரும். முன்னமே சொன்ன மாதிரி இதை காலைல வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். சாப்பாட்டுல புளிக் குப் பதிலா தக்காளி சேர்க்கலாம். வெள்ளைப்படுறது முழுசா குணமாகும். அத்திக்காயை துவரை.. இல்லைன்னா பாசிப்பருப்போட சேர்த்து கூட்டு செஞ்சி சாப்பிட்டு வர, வெள்ளைப்படுதல் சீக்கிரமே குணமாயிரும். ரத்தப்போக்கு நிக்கிறதுக்கு.. மேல்தோல் நீக்கிய நாவல்பட்டை (சிவப்பா இருக்கும்) 50 கிராம்.. (அ) அதே அளவுல அத்திப்பட்டை எடுத்து, அரை டம்ளர் அளவுக்கு சாறு வர்றவரைக்கும் தயிர் சேர்த்து இடிச்சிக்கணும். இதைக் காலையில வெறும் வயித்துல மூணு வேளை குடிக்கணும். ரத்தப்போக்கு சட்டுனு நிக்கும். ஆனைநெருஞ்சில் இலைக்கு சொன்ன அதே பத்தியம்தான் இதுக்கும். மாதவிடாயின்போது வர்ற வயித்துவலிக்கு.. ஒரு கைப்பிடி மலைவேம்பு தழைய எடுத்து அதோடகூட தயிர் சேர்த்து அரை டம்ளர் சாறு வர்ற மாதிரி நல்லா இடிச்சிக்கணும். தொடர்ந்து இதை மூணு நாள் காலையில வெறும் வயித்துல குடிக்கணும். வயித்துவலி விருட்டுனு ஓடிரும். கன்னு போடாத கிடாரியோட கோமியம் 200 மில்லி எடுத்து, இதுகூட புளியங்கொட்டை அளவு உப்பு சேர்த்து காலையில வெறும் வயித்துல குடிக்கணும். மாதவிடாய் வந்த மூணாவது நாள் குடிச்சா வயித்து வலி சரியாயிரும். சரியாகலைன்னா அடுத்த மாசம் குடிக்கணும். இந்த வைத்தியம் வயித்து வலிய மட்டுமில்ல.. மஞ்சள்காமாலை நோயையும் குணமாக்கிரும்

Related

முடி கொட்டுவதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்! மருத்துவ டிப்ஸ்!!

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இர...

அக்குள் கருமையை மறைய செய்யும் சர்க்கரை--அழகு குறிப்புகள்!

தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குள...

இளநரையை போக்கும் பிளாக் மேஜிக் கடுக்காய் ! ஹெல்த் ஸ்பெஷல்!!

அறுபது வயதில் `தாத்தா பாட்டி' ஆவது பெருமையான விஷயம். ஆனால், இருபது வயதிலேயே தலையில் இளநரை, பித்த நரை விழுந்து `தாத்தா-பாட்டி' என்...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:11:44 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,055

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item