மனசையும் `ஸ்மார்ட்'டாக வைக்கும் உணவு வகைகள் இவை

டேஸ்டி ராகி பால்ஸ் தேவை கேழ்வரகு மாவு 1 கப் வெல்லப்பொடி 1/2 கப் பொடித்த வேர்க்கடலை 1/2 கப் வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி உப்பு ஒரு ...

டேஸ்டி ராகி பால்ஸ் தேவை கேழ்வரகு மாவு 1 கப் வெல்லப்பொடி 1/2 கப் பொடித்த வேர்க்கடலை 1/2 கப் வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி உப்பு ஒரு சிட்டிகை சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி செய்முறை: 1. கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். 2. தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும். 3. அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும். 4. கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும். 5. இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும். இந்த டேஸ்டி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும். இரும்புச் சத்து எக்கச்சக்கமாக உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது. ராகி எங்கே கிடைக்கும்? சுத்தப்படுத்தி மாவாக அரைக்கப்பட்ட ராகி மாவு சென்னையில் அண்ணாசாலை காதிபவனில் அருமையாகக் கிடைக்கிறது. மற்ற ஊர்களில் ராகி தாராளமாகக் கிடைக்கிறது. இதுமட்டுமல்ல ஜென்டிமேன்! இதோ மற்றும் ஒரு மலிவான ஐட்டம். தினை மாவு எள்ளு புட்டிங் தேவை தினைமாவு -1 கப் சுத்தப்படுத்திய எள்ளு- 1 கப் வெல்லப்பொடி -1 கப் அல்லது தேன் - 1 மேஜைக்கரண்டி கிஸ்மிஸ் பழம் - 10 பொடித்த பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி பால் -1 கப் செய்முறை: தினைமாவுடன் வெல்லப்பொடி, எள்ளு ஆகியவைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தேவையானால் சிறிது பால் தெளித்துஉதிரி உதிரியாக கலக்கவும். இத்துடன் கிஸ்மிஸ் பழங்கள் மற்றும் பொடித்த பாதாம் பருப்பைக் கலந்து பரிமாறவும். சூப்பர் டேஸ்ட்டான சமைக்காத, இயற்கை வளம் மிக்க பக்குவம் இது. திகட்டாத தெள்ளமுது! மருத்துவக் குணங்கள் உறுதியான உடல்கட்டைப் பெறலாம். உடல் சோர்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் சக்தியை அளிக்கும். விளையாட்டு வீரர்கள் தாராளமாக பயன்படுத்தலாம். எள்ளு சட்னி தேவை சுத்தப்படுத்தி வறுத்தெடுத்த எள்ளு - 2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி சிறிய தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 புளி - சுண்டைக்காய் அளவு தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி உப்பு தேவைக்கேற்ப சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி தாளிதம் செய்ய கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு. செய்முறை வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், தக்காளி, புளி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியே வதக்கவும். மிக்சியில் மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு, புளி ஆகியவற்றுடன் உப்பை சேர்த்து சுற்றி, அத்துடன் தக்காளி, எள்ளு, தேங்காய்த்துருவலையும் சேர்த்து மைய அரைத்தெடுத்து தாளிதம் செய்யவும். நெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவை பிரமாதமாக இருக்கும். இதென்ன எள்ளு புராணம் பாடுகிறேன் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. * எள் உள்ளுக்கு மட்டும் ஆரோக்கியம் இல்லை; மாறாக அழகை பாதுகாக்கவும் செய்கிறது. * சிறுவயது முதல் எள்ளெண்ணெயை அதாங்க நல்லெண்ணெய் தலைக்குத் தடவி வர முடி `கருகரு'வென்று வளரும். * நல்லெண்ணெய் குளியல் உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்கு குளுமையூட்டி, சருமத்தைப் பளபளப்பாக்கும். * நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் வாய் ரணம், குணமாகி ஈறுகளைப் பலப்படுத்தும். இன்னமும் இளமை தெறிக்கும் கட்டுடலுக்குச் சொந்தமான அந்த பிரபல நடிகரின் அபிமானத்தைப் பெற்றது இந்த எள்ளு என்றால் வியப்பாக இருக்கிறதா? தினசரி அவருடைய டயட்டில் எள் இடம் பெறுகிறது என்ற தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். `கிண்'ணென்ற உடல்கட்டைப் பெற எள்ளுக்கே உங்கள் ஓட்டு. இன்னமும் ஒரு எளிய ரெசிபி. மிகவும் விலை மலிவான பொருள் இது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ் இந்த செழிப்பான கிழங்குகளைக் கொண்டு உடலை உரமாக்கலாம் வாங்க! தேவை சர்க்கரைவள்ளிக் கிழங்கு 250 கிராம், வெல்லம் 50 கிராம், நெய் - 1 தேக்கரண்டி, ஏலப்பொடி 2 சிட்டிகை. செய்முறை வள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மேல் தோல் மற்றும் நடுவே இருக்கும் நாரை நீக்கி நன்கு மசிக்கவும். இதோடு சுத்தமான வெல்லம், நெய், ஏலப்பொடி சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். செம டேஸ்ட்டான அதிரடி திடீர் தயாரிப்பு. கிழங்கு அதிகமாகக் கிடைக்கும் போது வாங்கி வற்றலாக்கி சேமித்து வைக்கலாம். அடிக்கடி இதை ருசித்து வந்தால் கட்டுடல் `மிஸ்டர்'களுக்குச் சொந்தம்!

Related

கைமணம்! ராகிபுட்டு

ராகிபுட்டு தேவையான பொருட்கள்: ராகி மாவு - 100 கிராம், உப்பு 1/4 டீஸ்பூன், தண்ணீர் -50 மில்லி, தேங்காய்த் துருவல் - 1/4 கப், சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை ராகி மாவை நன்றாக சலித்துவிட்டு உப்பையும...

ரசிக்க.. ருசிக்க! ஓட்ஸ் பாயசம்

ஓட்ஸ் பாயசம் தேவையான பொருட்கள் தண்ணீர் - 2 டம்ளர், ஓட்ஸ் - கைப்பிடி அளவு, பால் - 1/2 கப், முந்திரி+திராட்சை - 10கிராம், நெய் - 1 டீஸ்பூன், சுகர் - 30 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் சுகருக்கு பதில் ...

சமையல் குறிப்புகள்! மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு)

மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது முட்டைகுழம்பு) தேவையான பொருட்கள் (இரண்டு பேருக்குத் தேவையான அளவு) மிளகு 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி புளி தேவையான அளவு கரைத்துக்கொள்ளவும் (சிறிய எலுமிச்சை அளவு) கொத...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Jan 20, 2025 11:03:42 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,101,052

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item