கொங்கு காளான் வறுவல்....சமையல் குறிப்பு
கொங்கு காளான் வறுவல் இந்த ரெசிபி எனக்குக் கிடைத்தது மிகவும் சுவாரசியமான ஒன்று. சம்பவம் நடந்தது திட்டுப்பாறை என்னும் கிராமத்தில்! பொதுவாகவே...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_976.html
கொங்கு காளான் வறுவல்
இந்த ரெசிபி எனக்குக் கிடைத்தது மிகவும் சுவாரசியமான ஒன்று. சம்பவம் நடந்தது திட்டுப்பாறை என்னும் கிராமத்தில்!
பொதுவாகவே கொங்கு மண்டலத்தில் எள் மற்றும் வேர்க்கடலை மிகவும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் மஞ்சள் அமோக விளைச்சலைத் தரும். காங்கேயம் மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் தேங்காய் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள் அதிகமாக உள்ளன. கொங்கு மண்டலத்தில் சமையல் காண்ட்ராக்ட்டுகள் செய்யும் சமையல்காரர்களை ‘பண்டாரம்’ என்றழைப்பர். அப்படிப்பட்ட ஒரு சமையல்காரர் என்னிடம் கூறியது, “ஏன் சார் எத்தனையோ சமையல் பொடிகள் பழக்கத்தில் உள்ளன. ஆனால் அனைத்தும் ஒரு முழு பதார்த்தத்தை செய்ய ஏதுவாக இல்லை என்கிறீர்கள். நீங்களே ஏன் ஒரு
பொடியைக் கண்டுபிடிக்கக் கூடாது? அதுவும் கொங்கு மண்டலங்களில் விளையும் பொருட்களைக் கொண்டு?. என்றார்.
அவ்வாறு பிறந்ததே கொங்கு மசாலா பொடி. அதைக் கொண்டு செய்ததே இந்தக் காளான் வறுவல்.
கொங்கு மசாலாப் பொடி செய்யத் தேவையான பொருள்கள் :
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்,
எள் (வெள்ளை) - 1 டீஸ்பூன்,
வறுத்த தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
நிலக்கடலை - 2 டீஸ்பூன்
(அனைத்தையும், எண்ணெய் சேர்க்காமல், வாணலியில் வறுத்து ஆறவிடவும். பின்னர் தண்ணீர் விட்டு அரைக்கவும்.)
காளான் - 2 பாக்கெட் (பாதியாக வெட்டியது),
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. அரைத்த மசாலாவை, மைதா, உப்புடன் சேர்த்து, சிறிது நேரம் ஊறவிடவும்.
2. பின் வெட்டி வைத்துள்ள காளான் துண்டுகளைப் போட்டு நன்றாகப் பிசறி, வெயிலில் காயவைக்கவும்.
3. சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சுவையான கொங்கு காளான் வறுவல் ஆளை மயக்கும்.
1 comment
சிப்பி காளான் மற்றும் ஊறுகாய் கு தொடர்பு கொள்க 9659302906
Post a Comment