கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ்

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ் 'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச்...

கிச்சனுக்குள் காத்திருக்கும் 'குபீர்' ஆபத்து ! கரப்பான் பூச்சி 'ஸ்பிரே' + சமையல் கேஸ் 'மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த அந்த இல்லத்தரசி, மே 13-ம் தேதியன்று வழக்கம்போல கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்து சமையலை ஆரம்பித்தார். அப்போது, சமையல் மேடையில் அலைந்த கரப்பான் பூச்சியைக் கண்டவர், அதற்கான 'ஸ்பிரே’வை எடுத்து அழுத்தினார். அடுத்த நொடியே குபீரென தீப்பற்றி, கேஸ் சிலிண்டரும் வெடிக்க... 65 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காப்பாற்றச் சென்ற கணவருக்கும் தீக்காயங்கள்’ - இப்படி ஒரு தகவல், இன்டர்நெட்டில் 'தீ'யாக உலா வருகிறது. ஆனால், நாம் பலமாக 'வலை' வீசி தேடியும் எங்கேயுமே 'செய்தி'யாக அது பதிவாகியிருப்பதைக் காண முடியவில்லை. அதேசமயம், 'கேஸ் ஸ்டவ் எரியும்போது கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே அடித்தால் தீ விபத்துக்கான வாய்ப்பு இருக்கிறதா?' என்கிற கேள்வி நமக்கு எழ, சென்னை, எழும்பூரிலிருக்கும் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேஷ் கண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டோம். ''கரப்பான் பூச்சிக்கான ஸ்பிரே என்றில்லை... சென்ட், பாடி ஸ்பிரே, ரூம் ஸ்பிரே, நக பாலிஷ் என்று ஆல்கஹால் கலந்த பொருட்களை கிச்சனுக்குள் பயன்படுத்தவே கூடாது. அனைத்து ஸ்பிரேக்களுமே 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தி லேயே வெடிக்கக் கூடியவைதான். ஸ்பிரேக்களை சூரிய வெப்பத்தில் வைப்பதும் ஆபத்தானது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் என்று தெரிந்தும் இவற்றை கிச்சனுக்குள் அனுமதிப்பது எமனை வரவழைப்பதற்குச் சமம்!'' என்று எச்சரித்தவர், அடுப்படி ஆபத்து களைப் பற்றி பட்டியலே இட்டார்! ''கிச்சனில் சமையல் செய்யும்போது புடவை, சுடிதார், நைட்டி என்று எந்த உடை யானாலும், அதை காட்டனில் அணிய வேண்டும். ஒருவேளை ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், இந்த வகை துணிகள் உடம்போடு ஒட்டிக் கொள்ளும்; எளிதில் அகற்ற முடியாது. அது காயங்களை இன்னும் தீவிரமாக்கும். கிச்சன் பிளாட்ஃபார்ம் மேலாக ஒரு செல்ஃப் வைத்து, சமையல் பொருட்களை வைத்து, எடுப்பது கூடாது. கையை எட்டி மேலே இருக்கும் பொருட்களை எடுக்கும்போது, ஸ்டவ் எரிந்து கொண்டிருந்தால், உடையில் எளிதில் தீ பிடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன'' என்று அறிவுறுத்திய ராஜேஷ் கண்ணன், ''கேஸ் சிலிண்டரை நூறு சதவிகிதம் பயன்படுத்த எண்ணி, படுக்கை வாட்டில் வைத்தெல்லாம் பயன் படுத்துவார்கள் சிலர். இது ஆபத்தானது. லீக்கேஜ் இருந்தால் வெடித்து விடும். அதேபோல பவர் கட் ஆனதும் மிக்ஸி, கிரைண்டர் ஸ்விட்ச்களை உடனடியாக ஆஃப் செய்துவிட வேண்டும். இல்லையெனில் நீங்கள் வெளியில் சென்றிருக்கும் சமயமாக பார்த்து கரன்ட் வந்தால்... மிக்ஸி, கிரைண்டர் தானாக 'ஆன்’ ஆகி, ஒரு கட்டத்தில் மோட்டாரின் வெப்பம் அதிகமாகி, வெடிக்கும் ஆபத்தும் உள்ளது'' என்று சொன்னார். ''குழப்பமான மனநிலையும் விபத்துக்கான காரணிகளுள் ஒன்றுதான்'' என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் தாரா, ''குழப்பமான மனநிலையில் கிச்சனுக்குள் நுழைந்து பொங்கும் பாலை பார்த்துக் கொண்டேஇருப்பது, கேஸை 'ஆன்’ செய்துவிட்டு பற்ற வைக்க மறப்பது போன்றவையும் விபத்துக்கான விதைகளே. செல்போனில் மூழ்கியபடி சமைப்பதும் ஆபத்தே! ஒன்று சமைத்துவிட்டுப் பேசலாம். அல்லது, பேசிவிட்டு சமைக்கலாம். தூக்க மாத்திரைகள், அலர்ஜி மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு அலர்ட்னெஸ் குறைவாக இருக்கும். அது மாதிரியான சமயங்களில் கிச்சனில் நுழைவதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்'' என்று அக்கறையோடு டிப்ஸ்களைத் தந்தார் தாரா!

Related

சுவையான சத்தான ரவா தோசை

ரவா தோசை தேவையான பொருட்கள்: ரவா - ஒரு கப் மைதா - அரை கப் அரிசிமாவு - அரை கப் சீரகம் - 2 தேக்கரண்டி உப்பு - 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை சிறிது செய்முறை: ரவா, மைதா, அரிசி மாவு இவற்...

கைமணம்! சௌ சௌ பச்சடி

சௌ சௌ பச்சடி தேவையானவை: சௌசௌ - 1 சிறியதாக, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4 அல்லது 5, புளி - நெல்லிக்காயளவு, வெங்காயம் - பாதி, பூண்டு - 3 பல், மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்...

சமையல் குறிப்புகள்! பெசரட்டு

பெசரட்டு தேவையானவை: பாசிப்பயறு - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு. தாளிக்க: சீரகம் - டீஸ்பூன், வெங்காயம் - 3, உப்பு - சிட்டிகை, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூ...

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Sunday - Nov 24, 2024 9:23:38 PM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,086,668

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item