ரசிக்க ருசிக்க…! வேர்க்கடலை பலகாரம்
வேர்க்கடலை பலகாரம் தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை - தலா 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அரிசி மாவு - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6554.html
வேர்க்கடலை பலகாரம்
தேவையானவை: வேர்க்கடலை, சர்க்கரை - தலா 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அரிசி மாவு - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தண்ணீர் (அ) பாலில் கரைத்த அரிசி மாவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை வறுத்து, தோலை நீக்கவும். தேங்காயைத் துருவி, பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும். வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக பொடித்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டைகளை சரிவர பிடிக்க முடியவில்லையெனில், மிதமான சுடுதண்ணீரைத் தெளித்துப் பிடிக்கலாம். தனியே கரைத்த அரிசி மாவில் உருண்டைகளைத் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
வேர்க்கடலை பலகாரம் கரைத்த அரிசி மாவுடன் வறுத்துப் பொடித்த உளுந்து மாவை சிறிது சேர்க்கலாம். வாசனையாக இருக்கும்.
---------------------------------------------------------------------------
Post a Comment