அன்புச் செல்வங்களுக்கு... இஸ்லாமிய குண நலன்கள்

அன்புச் செல்வங்களுக்கு... இஸ்லாமிய குண நலன்கள் 1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ? பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்....

அன்புச் செல்வங்களுக்கு... இஸ்லாமிய குண நலன்கள் 1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ? பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும். (காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43) சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி) 2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ? நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4 3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ? தந்தையின் திருப்தி : இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது. (அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி. தாய்க்கு நன்மை செய்வது : இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத், மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15) 4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன? ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24) பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக 5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ? ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி) தீய குணங்கள் 1 . தற்பெருமை (நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37) நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்) 2 . கொடுமை அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி) 3 . கோபம் (பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள். (அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி) 4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல் உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி). 5. பொய் எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3) சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்) 6. கெட்டவற்றை பேசுதல் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்) 7. இரட்டை வேடம் போடுதல் மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்) 8. பாரபட்சம் காட்டுதல் நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்) முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135) 9. வரம்பை மீறிய புகழ்ச்சி – நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்) 10. பரிகாசம் முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11) 11. வாக்குறுதி மீறல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34) நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்) 12. சண்டை அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி) 13. குறை கூறல் குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1) இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12) 14. பொறாமை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்) 15. கெட்ட பார்வை (நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30) கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19) செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36) நற் குணங்கள் 1. நிதானம் இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67) உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19) 2. எளிமை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத். நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்) 3. தூய்மை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்) (நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4) 4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல் மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத் உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி) 5. நாவடக்கம் இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி) எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி) 6. அன்பாக பேசுதல் கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263) 7. பிறருக்கு உதவி புரிதல் நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்) 8. உண்மை பேசுதல் ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119) விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்) 9. நன்றி செலுத்துதல் மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்) 10. வெட்கப்படுதல் திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்) 11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்) அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி) 12. தவ்பா (மன்னிப்பு கோருதல்) எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி 13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல் நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி) தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்

Related

அமுத மொழிகள் 5603935554329108599

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item