சமையல் குறிப்புகள்! மட்டன் முள்ளங்கி குருமா
மட்டன் முள்ளங்கி குருமா தேவையான பொருட்கள் தொடைக் கறி - 1/2 கிலோ முள்ளங்கி - 1/4 கிலோ வெங்காயம் - 200 கிராம் தக்காளி - 200 கிராம் தேங்காய் ...

https://pettagum.blogspot.com/2011/06/blog-post_7414.html
மட்டன் முள்ளங்கி குருமா
தேவையான பொருட்கள்
தொடைக் கறி - 1/2 கிலோ
முள்ளங்கி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
தேங்காய் - 1/4 மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
பட்டை - 2
லவங்கம் - 2
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
செய்முறை
* இஞ்சி, பூண்டுவை விழுதாக்கவும். தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
* மட்டனைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* ஊறவைத்த மட்டனை தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டுத் தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.
* பின்பு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
* இப்போது வேக வைத்த மட்டனை இதனுடன் சேர்க்கவும்.
* நறுக்கிய முள்ளங்கியையும் சேர்த்து நன்கு வதக்கி வேக விடவும்.
* தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயில் பால் எடுத்து சேர்க்கவும்.
* குருமாவை இறக்குவதற்கு முன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், வாசமாகவும், ருசியாகவும் இருக்கும்.
******************************************************************************
Post a Comment