சமையல் குறிப்பு! கத்தரிகாய் சாதம்
கத்தரிகாய் சாதம் தேவையானப் பொருட்கள்: அரிசி - 250 கிராம் கத்தரிகாய் - 200 கிராம் தக்காளி - 4 பூண்டு - 6 பல் பட்டை, கிராம்பு, சோம்பு சிறிது...

https://pettagum.blogspot.com/2011/06/blog-post_06.html
கத்தரிகாய் சாதம்
தேவையானப் பொருட்கள்:
அரிசி - 250 கிராம்
கத்தரிகாய் - 200 கிராம்
தக்காளி - 4
பூண்டு - 6 பல்
பட்டை, கிராம்பு, சோம்பு சிறிது
மிளகாய் தூள், கரம் மசாலா - சிறிது
வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை-தாளிக்க
கொத்துமல்லி இலை, உப்பு
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும். வாணலியை வைத்து 50 மில்லி எண்ணை
ஊற்றி, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு
தக்காளி , வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
கத்தரிகாயை நீளவாக்கில் சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்தரிகாய்,
உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாவை கலவையுடன் சேர்த்து, சிரிது தண்ணீர்
விட்டு வேகவைக்கவும். கத்தரிகாய் வெந்தவுடன் கொத்துமல்லி இலை, தூவி
இறக்கவும்.
Post a Comment