மருத்துவ டிப்ஸ்! --உபயோகமான தகவல்கள்,
முருங்கை இலையை நல்லெண்ணெயில் மசித்து, மூட்டுவலி உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகும். ரோஜாப்பூ இதழை நீரில் காய்ச்சி, குடிநீராக்கி வாய் கொ...

ரோஜாப்பூ இதழை நீரில் காய்ச்சி, குடிநீராக்கி வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து, பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து வர, பல்வலி குணமாகும்.
பாலில் கற்கண்டு, மிளகு ஆகியவை கலந்து காய்ச்சி குடிக்க, தொண்டைக்கட்டு குணமாகும்.
சுக்கை தோல் நீக்கி, பாலில் அரைத்து அதை கொதிக்க வைத்துப் பற்று போட, தலைவலி நீங்கும்.
புளியந்தளிரைப் பறித்து துவையல் செய்து உண்டு வர, பித்தம் சமமாகி வயிற்று மந்தம் தீரும்
Post a Comment