இணைய பாதுகாப்பு #1 - Passwords--கணிணிக்குறிப்புக்கள்,

இணைய பாதுகாப்பு #1 - Passwords கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின...


இணைய பாதுகாப்பு #1 - Passwords



கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின் வளர்ச்சி அபாரமானது. எந்த இணையம் நமக்கு அதிகம் உதவுகிறதோ, அதே இணையம் தான் நமக்கு அதிகமான ஆபத்தையும் விளைவிக்கின்றது. அப்படிப்பட்ட இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

இது தொடர்பாக ஏற்கனவே சைபர் க்ரைம் - ஒரு பார்வை , ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் ஆகிய பதிவுகளில் ஓரளவு பார்த்திருந்தாலும், ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் விரிவாக, தொடர்ந்து பார்ப்போம்.

நம்முடைய இணைய கணக்குகளை நாம் மட்டுமே அணுகுவதற்கு பயன்படுவது கடவுச்சொல்( Password). இணையத்திருடர்கள் நம் கணக்கை திருடுவதற்கு அவர்கள் குறி வைப்பது நம்முடைய பாஸ்வேர்டை தான். அதனை பாதுகாப்பது பற்றி கொஞ்சம் இங்கு பார்ப்போம்.

1. முதலில் உங்கள் கடவுச்சொல் எளிதில் யூகிக்க முடியாதவையாகவும், கடினமாகவும் இருக்க வேண்டும். 

2. உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள், தொலைபேசி எண், மொபைல் நம்பர், பிறந்த நாள் இவைகளை பாஸ்வேர்டாக வைக்க வேண்டாம். உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களால் இவைகளை எளிதில் கணிக்க முடியும்.

3. எக்காரணம் கொண்டும் உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்காதீர்கள்.

4. முடிந்தவரை உங்கள் கடவுச்சொல்லில் எழுத்துக்கள், எண்கள் ஆகிய இரண்டையும் கலந்துக் கொடுங்கள். (உதாரணத்திற்கு abcd1234)

5. டிக்சனரியில் உள்ள வார்த்தைகளை கடவுச்சொல்லாக வைக்காதீர்கள். ஏனெனில் அவ்வாறான கடவுச்சொற்களை கண்டுபிடிப்பதற்காக அகராதி தாக்குதல் (Dictionary Attack) என்னும் தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்.

6. எல்லா தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

7. உங்கள் கடவுச்சொற்களை எங்கும் எழுதி வைக்காதீர்கள். அப்படி எழுதி வைத்தால் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.

8. நீங்கள் கடவுச்சொல்லைக் கொடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு கொடுங்கள்.

9. முக்கியமாக உங்கள் நினைவில் இருக்கக் கூடிய சொல்லாக வையுங்கள்.

10. ப்ரவ்சிங் சென்டர்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஏனெனில் அவைகளில் Keystroke Logging மென்பொருள்கள் இருக்கலாம். இதன் மூலம் நீங்கள் கீபோர்டில் டைப் செய்யும் அனைத்தையும் அவர்கள் அறிந்துக்கொள்ள முடியும். On-Screen Keyboard எனப்படும் திரை விசைப்பலகை மூலம் டைப் செய்தாலும் அந்த மென்பொருள்கள் மூலம் பதிவு செய்யப்படும்.


உதாரணத்திற்கு, ஒரு மெயில்:




இதன் தகவல்களை keystroke Logging மென்பொருள் மூலம் எடுக்கப்பட்டவை:


Image Credit: Wikipedia

இவற்றிலிருந்து நமது கடவுச்சொல்லை பாதுகாக்க, கடவுச்சொல்லை கொடுக்கும் போது அதற்கு முன்பும், இடையிலும் மேலும் சில எழுத்துக்களை சேர்த்து, அவற்றை மவுஸ் மூலம் நீக்கிவிடுங்கள். இது ஓரளவு பாதுகாக்கும்.


11. மொபைல்களில் சாட்டிங் செய்யும் வசதியை அளிக்கும் மூன்றாம் நபர் மென்பொருள்களை (Third Party Applications) பயன்படுத்தாதீர்கள். அவைகள் உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து நபர்களின் மின்னஞ்சல்களுக்கும் ஸ்பாம் மெயில்களை அனுப்புகின்றன.

Related

கணிணிக்குறிப்புக்கள் 5149273686480760150

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item