உடல் பருமனை குறைக்க எளிய வழிகள்--உபயோகமான தகவல்கள்
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்க...

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.
சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.
அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.
மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.
உயரம் (செ.மீ) | ஆண் (கிலோ) | பெண் (கிலோ) | உயரம் (இன்ச்) | ஆண் (எல்.பி) | பெண் (எல்.பி.) |
147 | - | 45-59 | 58 | - | 100-131 |
150 | - | 45-60 | 59 | - | 101-134 |
152 | - | 46-62 | 60 | - | 103-137 |
155 | 55-66 | 47-63 | 61 | 123-145 | 105-140 |
157 | 56-67 | 49-65 | 62 | 125-148 | 108-144 |
160 | 57-68 | 50-67 | 63 | 127-151 | 111-148 |
162 | 58-70 | 51-69 | 64 | 129-155 | 114-152 |
165 | 59-72 | 53-70 | 65 | 131-159 | 117-156 |
167 | 60-74 | 54-72 | 66 | 133-163 | 120-160 |
170 | 61-75 | 55-74 | 67 | 135-167 | 123-164 |
172 | 62-77 | 57-75 | 68 | 137-171 | 126-167 |
175 | 63-79 | 58-77 | 69 | 139-175 | 129-170 |
177 | 64-81 | 60-78 | 70 | 141-179 | 132-173 |
180 | 65-83 | 61-80 | 71 | 144-183 | 135-176 |
182 | 66-85 | - | 72 | 147-187 | - |
182 | 67-87 | - | 73 | 150-192 | - |
187 | 68-89 | - | 74 | 153-197 | - |
190 | 69-91 | - | 75 | 157-202 | - |
உணவுப் பழக்கத்தை சரிவிகிதமாக்கி உண்டுவாழ்வதால் உடல் பருமன் குறையும்.
நான் சொல்வதை கேளுங்கள். லாஜிக் பேசாதீர்கள்.
வெறுமனே நான் சொல்வதை ஒரு அடிமைப் போல் கேளுங்கள்.
இரண்டு விசயத்துக்கு கவனம் கொடுங்கள்.
ஒன்று உணவு, மற்றொன்று உடல்பயிற்சி.
உணவு
காலையில் கண்டிப்பாகப் பசியாறுங்கள்.
அதன்பின் மதியம்வரை வாயில் எதுவும் வைக்காதீர்கள்.
மதியம் நல்ல சாப்பாடு. பாதி சோறு, கோழி அல்லது மீன் என்று நல்ல சத்தான சாப்பாடு சாப்பிடுங்கள்.
அதன்பின் இரவு வரை வாயில் எதுவும் வைக்காதிர்கள்.
இரவு உணவாக, சப்பாத்தி, ரொட்டி என்று சிம்பெலாக சாப்பிடுங்கள்.
அதன் பிறகு எதுவும் வேண்டாம்.
இந்த சாப்பாடுகளைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கணும்.
அடுத்து, குடிக்கும் பானம்.
வெறும் ஆறிய தண்ணீர்தான்.
ஆறிய தண்ணீரைத் தவிர வேறு எதுவும் குடிக்ககாமல் இருக்கணும்.
தேநீர், காப்பி, என்று சூடான பானம் முதல், ஆரஞ்சு, பெப்சி, கோலா போன்ற குளிர் பானம் வரை நோ....நோ...நோ...
உடற்பயிற்சி
உடற்பயிற்சி என்று தனியாக செய்வது கஷ்டம்தான். அதனால், தனியாக உடற்பயிற்சி என்று எதுவும் செய்யாவிட்டால் பரவாயில்லை.
அன்றாடம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.
வேண்டுமென்றே, அன்றாடம் நடந்து போங்கள்.
விருப்பப்பட்டு அன்றாடம் நடந்து போங்கள்.
மார்க்கெட் போகனுமா?
காரை ஒரு 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் பார்க் பண்ணி நடந்து போங்கள்.
வேறு எங்காவது போகனுமா?
கடையின் வாசலில் கார் பார்க் பண்ண இடமிருந்தாலும், அதை பயன்படுத்தாதிர்கள்.
தூரமாக பார்க் பண்ணி நடந்து செல்லுங்கள்.
படி ஏறும் வேலையே இல்லாவிட்டாலும், சும்மா ஏறி போங்கள்.
படி ஏற விரும்புங்கள்.
குப்பை போடணுமா?
வயிறு அழுந்த குனிந்து குப்பை போடுங்கள்.
வீடு கூட்டணுமா?
வயிறு அழுந்த குனிந்து கூட்டுங்கள்.
மெனக்கெட்டு,
அக்கறை எடுத்து,
மிகவும் முக்கியமாக விருப்பப்பட்டு,
வீட்டு வேலைகளை அன்றாடம் செய்யுங்கள்.
மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் மிகவும் சுலபமான வழிமுறைகள்.
எந்த செலவும் இல்லை.
ஒரு மாதம் செய்து பாருங்கள்.
உடல் எடை வித்தியாசம் தெரியும்.
ஆனால், யாரும் செய்ய மாட்டீர்கள் என்று தெரியும்.
காரணம், அவை சவால் இல்லை.
பெருமைப் பட எதுவும் இல்லை.
காசு செலவு இல்லை.
மாறாக,
சுய கட்டுப்பாடு அவசியம்.
வாயை கட்டணும்.
மெனெக்கெட்டு நடக்கணும்.
இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.
உடல் எடை குறைக்க மருந்து விற்பவர்கள் எதையும் விற்பார்கள். அவர்கள், பழைய கால மருத்துவம், நவீன மருத்துவம் என்ற பெயரில் எதையாவது நம் தலையில் கட்டுவார்கள். முடிந்தால், மலத்தை பாடம் பண்ணி, இது இயற்கை வைத்தியம் என்று சொல்லி நம்மை ஏமாற்றுவார்கள். எல்லாம் ஒரே பிசினஸ் மயம்தான்.
இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடை குறைக்க விரும்பும் நபர்கள், பாடம் செய்யப்பட்ட மலத்தையும் கூட மருந்தாக எடுக்க தயார் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு எப்படியாவது எடை குறைந்தால் சரி. எதை சாப்பிடுகிறோம் என்று கவலையில்லை.
மருந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்றால், உலகில் ஒரு பணக்கார குண்டு நபர்களை கூட நாம் பார்க்க இயலாது. எல்லாரும் அதிக பணம் கொடுத்து, விலையுயர்ந்த மருந்து சாப்பிட்டு, சிலிம்மாகத்தான் இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை.
13 comments
FANTASTIC INFO
ALL ARE FANTASTIC INFO SIR.
FANTASTIC INFO
welcome dear friends thriugnana sambandam and prabhu raj all are thanks for your's comments by pettagum A.S. Mohamed Ali
usezabae info
அருமை நண்பர் Akbar Ali அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல! நாளும் தங்களின் வருகை தொடரட்டும். கருத்துக்கள் பல தெரிவிக்க விழைகின்றேன். என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
super tips!!!! and the way you written this article is very interesting!!! Thanks and keep going with such wonderful articles....
Saranya Jothi Mani அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல! நாளும் தங்களின் வருகை தொடரட்டும். கருத்துக்கள் பல தெரிவிக்க விழைகின்றேன். என்றும் அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
great tips. Keep posting useful posts like this! :)
Siva Darma
http://www.tradilife.com/
Dear Siva Darma தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! பெட்டகம் A.S.முஹம்மது அலி.
Assalamu alaikkum mohammed ji well said. .thank you for your awesome healthy tips.
அன்பார்ந்த சகோதரி ஜாஸ்மின் நிலோபர் அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம்! தங்களின் பெட்டகத்தின் வருகைக்கும் தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கும் நன்றிகள் பல! அல்ஹம்துலில்லாஹ்!! அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
thank u sir,
i have thyroid(Increase)and i like non veg food...
recently i go to gym but same weight (some times increase or decrease)
i follow diet also.. then
how can i reduce..
Post a Comment