ஆப்பிள் கன்னம் வேண்டுமா? --அழகு குறிப்புகள்.,
ஆப்பிள் கன்னம் வேண்டுமா? கன்னங்கள் ஒட்டி, குழி விழுந்துபோன பெண்களுக்கு, ஆப்பிள் கன்னங்கள் மீது ஆசை இருக்காதா என்ன? தங்களுக்கு அப்படி கும்...

கன்னங்கள் ஒட்டி, குழி விழுந்துபோன பெண்களுக்கு, ஆப்பிள் கன்னங்கள் மீது ஆசை இருக்காதா என்ன? தங்களுக்கு அப்படி கும்மென்ற கன்னங்கள் உருவாகாதா என்று ஏங்குவர். அப்படிப்பட்ட உங்கள் கன்னங்களும், ஆப்பிள் கன்னங்களாக மாற, இதோ சில எளிய வழிமுறைகள்:
* அடிக்கடி வாய்க்குள் காற்றை நிரப்பி, கன்னங்களை பலூன் போல் ஊதி, தொடர்ந்து, ஐந்து நிமிடம் வைத்துக் கொள்ளுங்கள்.
* காலையும், மாலையும் சிறிது நேரம் தண்ணீரை வாய்க்குள் வைத்து பயிற்சி செய்வது போல் அங்கேயும், இங்கேயுமாக குலுக்குங்கள்.
* வாய்க்குள் காற்றை நிரப்பி, இரண்டு கைகளிலும் உள்ள மோதிர விரல், நடு விரல், சிறிய விரல் ஆகியவைகளை ஒன்றாக்கி, கீழே இருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். தினமும் குறைந்தது, 25 முறை இப்படி செய்து வந்தால் ஆப்பிள் கன்னங்கள் கிடைக்கும்.
* குழி விழுந்த கன்னங்களை கொண்டவர்கள், அதிக கவனத்துடன் மேக் - அப் செய்ய வேண்டும். சிரிக்கும்போது, எலும்புகள் வெளியே தள்ளிக் கொண்டு தெரியும் விதத்தில் இருந்தால், அதில் சிறிதளவு ரூஜ் பூசுங்கள்; அந்த குறை தென்படாது.
Post a Comment