முருங்கை'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும்-- விவசாயக்குறிப்புக்கள்
வீட்டுத் தோட்டத்தில் செடிமுருங்கை நடவு செய்துள்ளேன். இரண்டு ஆண்டுகள் ஆகியும் காய்ப்புக்கு வரவில்லை. இதற்கு காரணம் என்ன... தீர்வு என்ன?...

'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும் என்றுதான் செடிமுருங்கை நடவு செய்கிறோம். இது, ஆறு மாதங்களில் காய்ப்புக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தும், காய்க்கவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. செடிமுருங்கை ஒரு மீட்டர் அளவுக்கு வளர்ந்தவுடன் கவாத்து செய்தால்தான், செடியின் தண்டுப் பகுதி பெருத்து, காய்க்கும். இல்லையென்றால், செடி உயரமாக வளர்ந்து காய்ப்புத் தன்மை குறைய வாய்ப்புகள் உள்ளன. காலம் கடந்துவிட்டாலும், இப்போது கவாத்து செய்வது, உங்களுக்குப் பலனளிக்கலாம்.
Post a Comment