மாங்காய் ரெசிபீஸ்--சமையல் குறிப்புகள்
மாங்காய் மோர்க் கூட்டுதேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (கிளி மூக்கு மாங்காய்) - 1, காரட் பெரியது - 1, பீன்ஸ்- 50 கிராம். உருளைக் கி...
செய்முறை : தேங்காயைத் துருவி சீரகம், பச்சைமிளகாயுடன் விழுதாக அரைத்துக் கொள்ளவும். மாங்காய், காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்கவும், கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, சிரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா 1 டீஸ்பூன் போட்டு கொஞ்சம் பெருங்காயத் தூள் போட்டுத் தாளித்து எடுத்து வைத்துக் கொண்டு; அதே வாணலியில் காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். காய்கறிகளைப் பொடியாக நறுக்குவதால் சீக்கிரம் வெந்து விடும். கலரும் மாறாது. காய்கறிகள் வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு நன்கு கெட்டியான தயிரை உடன் ஊற்றி, உப்பைப் போட்டு இறக்கி விடவும். ஏற்கெனவே தாளித்து வைத்ததை எடுத்துப் போட்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலையை அதனுடன் போட்டு மேலே ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கலந்து பரிமாறவும். கமகம வாசனையுடன் சுவையாய் இருக்கும் இந்த மோர்க் கூட்டு.
மாங்காய் சித்ரான்னம்
தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் (பெரியது) - 1, காரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 1 கப், வற்றல் மிளகாய் -8, பாஸ்மதி அரிசி - 2 கப், கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா ருடீஸ்பூன், கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை நன்கு அலம்பி பொடியாக நறுக்கியது - ஊறுகாய் விருப்பத்திற்கேற்ப வைக்கவும், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : பாஸ்மதி அரிசியை உதிர் உதிராக சாதம் வடித்துக் கொள்ளவும், சாதத்தின் மேல் 2 டீஸ்பூன் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் பரவலாக ஊற்றி வைக்கவும். சாதம் இன்னும் வாசனையாக இருக்கும். வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், பெருங்காயம், வற மிளகாய், மஞ்சள்ப் போட்டு வறுபட்டவுடன், மாங்காயைத் துருவி சேர்க்கவும். பின் தேங்காயைச் சேர்க்கவும். பின்பு துருவிய காரெட்டைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு நன்கு கலக்கவும். பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு சாதம் உடையாமல் நன்கு கிளறவும். கடைசியில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை, புதினா, மல்லி இலைகளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும். பிரயாணம் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம். செய்வதும் எளிது.
திடீர் மாங்காய் ஊறுகாய்
இந்த மாங்காய் ஊறுகாயை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.
இந்த ஊறுகாய் செய்ய புளிப்பில்லாத மாங்காய் இருந்தால் நன்றாக இருக்கும். இரண்டு மாங்காயைப் பொடிப் பொடியாக நறுக்கி உப்புப் போட்டு பிசறி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்த பின், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து, மிளகாய்த் தூள் நான்கு டீஸ்பூன் போட்டுப் பொரிய விட்டு பொருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன் போட்டு நறுக்கிய மாங்காயைப் போட்டு ஒரு புரட்டு புரட்டவும் தண்ணீர் படாமல் இருந்தால் பத்து நாட்கள் வரை தாங்கும் ஊறுகாய் இது. கோடை விடுமுறைக்கு டூர் செல்பவர்கள், இது மாதிரி போட்டு எடுத்துச் செல்லலாம்.
மாங்காய் பச்சடி
தேவையான பொருட்கள்: இனிப்புள்ள மாங்காய் - 2, வெல்லம் - 2 கப், பச்சை மிளகாய் - 4, கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தலா ரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை : மாங்காயை தோல் சீவி சிறிய துண்டங்களாக்கவும் குக்கரில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காய்த் துண்டங்களைப் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்து விடவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி அதனுடன் வெல்லத்தையும் போட்டு, மசித்த மாங்காயையும் போட்டு தேவையான உப்புப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை கொத்தமல்லி தாளிக்கவும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பச்சடி இது!
Post a Comment