புஜங்காசனம்--ஆசனம்
செய்முறை: முதலில் குப்புறப்படுத்துக்கொள்ளவும். பின்னர் இரு கைகளையும் தோள்பட்டைக்கு அடியில் வையுங்கள். இயல்பான சுவாசத்தில் கைகளை சற்று அழ...
https://pettagum.blogspot.com/2012/06/blog-post_1175.html
செய்முறை: முதலில் குப்புறப்படுத்துக்கொள்ளவும். பின்னர் இரு கைகளையும்
தோள்பட்டைக்கு அடியில் வையுங்கள். இயல்பான சுவாசத்தில் கைகளை சற்று அழுத்தி
முகத்தை மெள்ள நிமிர்த்தி, அப்படியே தோள் பகுதியையும் மேலே தூக்குங்கள்.
இரு கால் பாதங்களும் சேர்ந்து இருக்க வேண்டும்.. உள்ளங்கை-தோள்பட்டை வரை
சமப்பகுதி நேர்க்கோட்டதக இருக்க வேண்டும். முதலில் கடினமாக இருக்கும்.எனவே
எந்த அளவிற்கு செய்யமுடியுமோ, அந்தளவுக்கு செய்வது நல்லது. இவ்வாறு 3 முதல்
5 முறை செய்யவும்.
பயன்கள்:
மார்பு எலும்பு நன்கு விரிவடையும். பிராணசக்தி உடம்பில் அதிகம் சேரும்.
இடுப்பு பகுதி சுருங்கும். செரிமான கோளாறு வராது. பெண்களுக்கு மாதவிடாய்
கோளாறுகள் நீங்கும். அடிவயிற்று பிரச்சினைகள் தீரும்.
Post a Comment