மருதாணி வைக்க போகிறீர்களா? -- ஹெல்த் ஸ்பெஷல்
மருதாணி பவுடரை, ஒரு மெல்லிய துணியில் நன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த பவுடரில், டீ டிகாஷன் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். (...

https://pettagum.blogspot.com/2012/06/blog-post_8906.html
மருதாணி பவுடரை, ஒரு மெல்லிய துணியில் நன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த
பவுடரில், டீ டிகாஷன் கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். (டீ
டிக்காஷன் போடும் போது அதில், 2 தேக்கரண்டி டீ பவுடருக்கு 1 தேக்கரண்டி
சர்க்கரை, 2 லவங்கம் சேர்த்து ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவிற்க்கு சுண்டும்
வரை கொதிக்க விடவும்) பின், இக்கலவையில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை
சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலக்கவும். அதன் பின், நீலகிரி
தைலம் சேர்த்து தோசை மாவு பதத்தில் வரும் வரை கலந்து கொள்ளவும், கோன்
செய்து இக்கலவையை அதனுள் நிரப்பி, வேண்டிய டிசைன் போடவும். இக்கலவையை முதல்
நாள் இரவே செய்து வைத்துவிட வேண்டும். இரவு உபயோகிப்பதாக இருந்தால்,
காலையில் செய்து, இரவு போடவும். மருதாணி டிசைன் போட்ட உடன், ஆறு மணி நேரம்
கையில் இருக்க வேண்டும்.
Post a Comment