செரிமானத்தை தூண்டும் உடற்பயிற்சிகள்!!!
தற்போதுள்ள காலகட்டத்தில் உணவில் கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமாக உணவு உண்டு, பின் செரிமானம் ஆகாமல் நிறைய பேர் கஷ்டப்படுவார்கள். ஆன...

• அதிகமாக சாப்பிட்டப்பின், சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அதிகமாக உண்டபின் நடந்தால் செரிமானத் தன்மையை அதிகரிப்பதுடன் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்காமல், உடல் எடை போடாமலும் இருக்கும்.
• பிறகு குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
• செரிமானத்தில் மூச்சுப் பயிற்சியும் முக்கியமான ஒன்றாககும். முதலில் நேராக உட்கார்ந்து, மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை 2-3 நிமிடம் உள் இழுக்கவும். பின் அதேபோல் மனதிற்குள் 5 வரை எண்ணிக் கொண்டு, மூச்சை வெளிவிடவும். இவ்வாறு செய்தால் செரிமானமாவதோடு, மனதும் ரிலாக்ஸ் ஆகும். இவ்வாறு 5 முறை செய்யலாம். இந்த பயிற்சி நல்ல பலனைத்தரும்.
• அடுத்ததாக தரையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் நீட்டி, பின் அவற்றில் வலது காலை மடக்கி, பின் இரண்டு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும். அப்போது நன்கு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். இவ்வாறு காலை மாற்றி இடது காலில் செய்யவும். இந்த பயிற்சியை 3 முறை செய்யலாம். நல்ல பலன் கிடைக்கும்.
Post a Comment