மகராசனம் (நிலை-1) -- ஆசனம்
செய்முறை..... விரிப்பில் மல்லாந்து படுத்து இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். அடுத்து இரு முழங்கைகளையும் தரையோ...

விரிப்பில் மல்லாந்து படுத்து இரு கைகளையும் சேர்த்து தலைக்கு பின்னால் பிடரியில் வைக்கவும். அடுத்து இரு முழங்கைகளையும் தரையோடு படிய வைத்து, இரு கால்களையும் முழங்கால் அளவு மடக்கி குத்திட்டு வையுங்கள். இரு பாதங்களையும் 2 அடி தூரம் பக்கவாட்டில் அகட்டிவைக்க வேண்டும். இரு முழங்கால்களும் வலப்பக்கமாக தரையில் படுமாறு பக்கவாட்டில் கொண்டு சென்று பின் அதே சமயம் தலையை இடதுபக்கமாக திருப்பவும்.
இதேநிலையில் இடுப்பு-புட்டப் பகுதியை வலப்பக்கம் தூக்கக்கூடாது. இதே போல், இயல்பான சுவாசத்தில் அடுத்த பக்கம் மாற்றி செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.
பயன்கள்:
சிறுநீரக பிரச்சினைகள் அகலும். முதுகுதண்டில் வலி இராது. உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
Post a Comment