ட்ரை ஃப்ரூட்ஸ் பாஸ்கெட் தேவையானவை: பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, உலர்ந்த பேரீச்சை, செர்ரிபழம், அக்ரூட், ஏப்ரிகாட், கி...

ட்ரை ஃப்ரூட்ஸ் பாஸ்கெட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, உலர்ந்த பேரீச்சை, செர்ரிபழம், அக்ரூட், ஏப்ரிகாட், கிஸ்மிஸ் எல்லாம் சேர்ந்து மொத்தம் - 2 கப், சாரைப்பருப்பு, பிஸ்தா - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நன்கு சலித்த மைதா மாவு, சர்க்கரை - தலா 2 டம்ளர், கேசரி பவுடர் - 2 சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவுடன் கேசரி பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ஊற்றி கெட்டியாக பிசையவும். இதை சிறு உருண்டைகளாக செய்து, கையினால் சிறிய கூடை போல் செய்து கொள்ளவும். சர்க்கரை, எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை சிறிதளவு எடுத்து, செய்து வைத்துள்ள கூடையில் போட்டு வாய் பகுதியை மூடிவிடவும். சிறிது மாவை எடுத்து உருட்டி நீளமாக பிடி போல் செய்து ஒட்டவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து, மிதமான தீயில் எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.
சர்க்கரை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு, கரைந்ததும் 2 டீஸ்பூன் பாலை சேர்த்து காய்ச்சவும். மேலாக மிதந்து வரும் அழுக்கை நீக்கி, கம்பிப் பதம் வந்ததும் பொரித்தெடுத்த கூடைகளை நான்கு நான்காக பாகில் போட்டு எடுத்து, அகலமான தாம்பாளத்தில் அடுக்கவும். பாகு மீந்துவிட்டால் கூடைகளின் மேல் சமமாக ஊற்றவும்.
ட்ரை ஃப்ரூட்ஸ் பாஸ்கெட்: ட்ரை ஃப்ரூட்ஸ் இல்லாதவர்கள், வேர்க்கடலை (அ) பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம். வித்தியாசமாக இருக்கும்.
Post a Comment