கைமணம்! நட்ஸ் - கோவா கச்சோரி
நட்ஸ் - கோவா கச்சோரி தேவையானவை: எண்ணெய் - தேவையான அளவு. மேல் மாவு செய்ய: மைதா - 200 கிராம், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - இரண்டு டே...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3185.html
நட்ஸ் - கோவா கச்சோரி
தேவையானவை: எண்ணெய் - தேவையான அளவு.
மேல் மாவு செய்ய: மைதா - 200 கிராம், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்.
பூரணம் செய்ய: இனிப்பு இல்லாத கோவா - 100 கிராம், பால் பவுடர் - 50 கிராம், ஏலக்காய்த்தூள், பட்டை - கிராம்புத்தூள் தலா - அரை டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா - இரண்டு டேபிள்ஸ்பூன்.
சர்க்கரை சிரப் செய்ய: சர்க்கரை - 100 கிராம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ - சிறிதளவு.
செய்முறை: மேல்மாவுக்கு கொடுத்துள்ளவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து சிறிது ஈரமுள்ள துணி போட்டு மூடி வைக்கவும்.
சர்க்கரையில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, பிசுக்குப் பதம் வந்ததும் பொடித்த பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து இறக்கினால்... சிரப் தயார்!
பூரணத்துக்குக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
மேல் மாவுக்கு பிசைந்தவற்றை சிறு பூரிகளாக தேய்த்து, அதனுள் சிறிது பூரணத்தை வைத்து அழுத்தி மூடி, மறுபடி குழவியால் லேசாக தேய்த்து காயும் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
பரிமாறும்போது பொரித்த பூரிகளின் மேல் சிறு சிறு துளைகள் செய்து, அதில் சர்க்கரை சிரப்பை ஊற்றிக் கொடுக்கலாம்.
நட்ஸ் - கோவா கச்சோரி: மேல் மாவில் சிறிது ரவை சேர்த்தால் பூரி 'கிரிஸ்பி’யாக வரும்.
Post a Comment