கைமணம் - தானிய பொடிமாஸ்
தானிய பொடிமாஸ் தேவையானவை: ஏதேனும் ஒரு பயறு - ஒரு கப், பூண்டு - 5 பல், மோர்மிளகாய் - 4, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - சிறிதளவு. செய்முறை: ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_7691.html
தானிய பொடிமாஸ்
தேவையானவை: ஏதேனும் ஒரு பயறு - ஒரு கப், பூண்டு - 5 பல், மோர்மிளகாய் - 4, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை: பயறை முதல் நாளே ஊற வைத்து முளைகட்டி வைத்துக் கொள்ளவும். மறுநாள் வேகவைத்து நீர் இல்லாமல் நன்றாக வடித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மோர் மிளகாயைப் பொடித்து போட்டு நன்றாக வறுக்கவும். இதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை புரட்டவும். சூடு ஆறியதும், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு முறை சுற்றவும். வெந்த பயறையும் சேர்த்து விப்பரில் 4, 5 முறை சுற்றி எடுக்கவும்.
தானிய பொடிமாஸ்: வேக வைத்த வாழைக்காயை சேர்த்து செய்தால் மணமாக இருக்கும்.
Post a Comment