குக்கும்பர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - 4 கப், தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரி - 2 கப், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள...

குக்கும்பர் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 4 கப், தோல், விதை நீக்கி துருவிய வெள்ளரி - 2 கப், கடுகு, நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 (நறுக்கிக் கொள்ளவும்), கொத்தமல்லி, கறிவேப்பிலை, சர்க்கரை, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை தாளித்து, ஆறியதும் மாவில் சேர்க்கவும் (சூடாக இருக்கும்போது சேர்த்தால் மாவு கட்டிதட்டி விடும்).
தாளித்த மாவுடன் வெள்ளரித் துருவலைப் பிழிந்து சேர்த்து... சர்க்கரை, உப்பு கலந்து இட்லித் தட்டில் வேக வைக்கவும்.
தொட்டுத் கொள்ள எதுவும் தேவைஇல்லை. மிருதுவான, சத்து நிறைந்த இந்த இட்லி கோடை ஸ்பெஷல்!
குக்கும்பர் இட்லி: சர்க்கரைக்கு பதிலாக உலர் திராட்சை சேர்த்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment