உருளைக்கிழங்கு-கடலைப்பருப்பு-அப்பளக் கூட்டு தேவையானவை: உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, கடலைப்பருப்பு - 50 கிராம், அப்பளம் - 5, தேங்காய்...

உருளைக்கிழங்கு-கடலைப்பருப்பு-அப்பளக் கூட்டு
தேவையானவை: உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 2, கடலைப்பருப்பு - 50 கிராம், அப்பளம் - 5, தேங்காய் - 3 துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து ஒன்றிரண்டாக பிசைந்து கொள்ளவும். கடலைப்பருப்பில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்த்து வேக வைத்து, பிசைந்து வைத்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும். அப்பளத்தை பொரித்துக் கொள்ளவும். தேங்காயை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, சோம்பை போடவும். நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, கடலைப் பருப்பு கலவையைப் போடவும். சிறிது தண்ணீர் விட்டு, உப்பு சேர்க்கவும். அரைத்த தேங்காயைப் போட்டுக் கிளறிவிடவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும் பொரித்த அப்பளத்தை உடைத்துப் போட்டு, கொத்தமல்லி தூவி, கிளறி இறக்கவும்.
உருளைக்கிழங்கு - கடலைப்பருப்பு - அப்பளக் கூட்டு: தேங்காயுடன் கசகசாவை சேர்த்து அரைத்து செய்தால் ருசியாக இருக்கும். அப்பளத்துக்கு பதிலாக வத்தலையும் வறுத்து போடலாம்.
Post a Comment