உணவே மருந்து! நெல்லி டேட்ஸ் டிலைட்!
நெல்லி டேட்ஸ் டிலைட்! தேவையான பொருள்கள்: பெரிய நெல்லிக்காய் - 1/2 கிலோ, பேரீச்சம்பழம், வெல்லம் - தலா 300 கிராம், உப்பு - 1 டீஸ்பூன், ஏலக்க...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_4104.html
நெல்லி டேட்ஸ் டிலைட்!
தேவையான பொருள்கள்:
பெரிய நெல்லிக்காய் - 1/2 கிலோ, பேரீச்சம்பழம், வெல்லம் - தலா 300 கிராம்,
உப்பு - 1 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி- தலா 1/2 டீஸ்பூன், நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி, துணியால் துடைத்து சுத்தப்படுத்தவும். பிறகு, குக்கரில் மூன்று விசில் வரும் வரை நெல்லிக்காயை வேகவிடவும். சூடு ஆறியபின் நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும்.
கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், பொடித்த வெல்லம், உப்பு, நெல்லிக்காய்களை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். ஒரு நான்-ஸ்டிக் அல்லது அடி கனமான சட்டியில் நெய்விட்டு, அரைத்த விழுதை நன்றாகக் கெட்டியாகும் வரை கிளறவும். ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்து ஒரு அலுமினிய ஃபாயில், அல்லது தாம்பாளத்தில் கொட்டி சிறிய துண்டுகள் போடவும்.
கர்ப்பகாலத்தில் தினமும் காலையும், மாலையும் ஒரு துண்டு சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியம் பெறுவர்.
Post a Comment