சமையல் குறிப்புகள்! முகலாய் குருமா

முகலாய் குருமா தேவையானவை ; மட்டன் (இளசாக) 500 கிராம் பெரிய வெங்காயம் 100 கிராம் சைனாப்பூண்டி 50 கிராம் தக்காளி 100 கிராம் எலுமிச்சம்பழம் 1...

முகலாய் குருமா தேவையானவை ; மட்டன் (இளசாக) 500 கிராம் பெரிய வெங்காயம் 100 கிராம் சைனாப்பூண்டி 50 கிராம் தக்காளி 100 கிராம் எலுமிச்சம்பழம் 1 பச்சை மிளகாய் 10 பட்டை 1 துண்டு கிராம்பு 6 சோம்பு, ஜீரகம் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் 4 மிளகுத்தூள் சிறிது தேங்காய்ப்பூ 2 டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு 50 கிராம் கறிவேப்பிலை சிறிது புதினா சிறிது தூள் உப்பு தேவையானது நெய் 1 டேபிள் ஸ்பூன் கோல்டுவின்னர் 100 மில்லி மட்டன் துண்டுகளை அலசி 1/2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்துவிடவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய், முந்திரிப்பருப்பு, பூண்டு ஆகியவற்றை தனித்தனியே அரைத்து வைக்கவும். மட்டனை எடுத்து, அரைத்து பூண்டுடன் பிசறி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். செய்முறை ; கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும், பட்டை கிராம்பு, சோம்பு, ஜீரகம், கறிவேப்பிலை, தட்டிய ஏலக்காய் ஆகியவற்றைப் பொரித்துக்கொண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து சிவக்க வதக்கவும். மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளவும். பிறகு தக்காளியைப் போட்டு சுருள வதக்கிக் கொண்டு, மீதியுள்ள எண்ணையைவிட்டு, அரைத்த பச்சை மிளகாய், பிறகு முந்திரி, கடைசியாக தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கி, வேகவைத்த மட்டன் அதிலுள்ள நீர் ஆகியவற்றைச் சேர்த்து தக்க உப்பு சேர்த்து சற்று கொதிக்கவிடவும். (அடி பிடித்துவிடாமல் அவ்வப்போது கிளறி விடவும்) இரண்டு கொதிவந்ததும், நெய்யை விட்டு, ஆய்ந்து கழுவிய புதினாத் தழைகளைத் தூவி எலுமிச்சை சாற்றைவிட்டு இறக்கிவைத்து மூடிவிடவும் 1/2 மணி கழித்து எடுத்துப் பரிமாறவும். சப்பாத்தி, பராத்தா, இடியாப்பம், இட்லி, ஃப்ரைடு ரைஸ், பிரியாணி எல்லாவற்றுடனும் சேரும் ஜோக்கர் குழம்பு இது. குருமா மிகவும் கெட்டியாக இருந்தால் இறக்குவதற்குமுன் சிறிது பால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

Related

சமையல் குறிப்புகள் 2999874153916552564

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item