உணவே மருந்து! முருங்கைப்பூ பொரியல்
முருங்கைப்பூ பொரியல் தேவையான பொருட்கள் முருங்கைப்பூ - 1 கப் நல்லெண்ணெய் - 50 மில்லி சீரகம் - கால் ஸ்பூன் பூண்டு பல் - 10 ( பொ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_4599.html
முருங்கைப்பூ பொரியல்
தேவையான பொருட்கள்
முருங்கைப்பூ - 1 கப்
நல்லெண்ணெய் - 50 மில்லி
சீரகம் - கால் ஸ்பூன்
பூண்டு பல் - 10 ( பொடியாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 100 கிராம் ( பொடியாக நறுக்கவும்)
நாட்டு முட்டை - 1
உப்பு - தேவைக்கு
செய்முறை
முருங்கைப்பூவை அலசி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, முருங்கைப்பூ போடவும், வதங்கியவுடன் நாட்டு முட்டை விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் பிரட்டி விடவும்.
முருங்கைப்பூ பொரியல் ரெடி.
இதனை சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
முருங்கைப்பூ பொரியல் கர்ப்பிணி பெண்களுக்கு ஒன்பதாவது மாதம் முதல் கொடுக்கலாம். வாயுத்தொல்லை நீங்கி சுகப்பிரசவம் ஆகும்.
Post a Comment