சமையல் குறிப்புகள்! நான்கு பருப்பு வடை
நான்கு பருப்பு வடை அரிசி மாவு - 1 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ஒவ்வொன்று...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_772.html
நான்கு பருப்பு வடை
அரிசி மாவு - 1 கப்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ஒவ்வொன்றும் ஒரு டேபிள் ஸ்பூன், விழுதாக அரைக்க -
பச்சை மிளகாய் - 7,
பெருங்காயம் - 1 டீஸ்பூன், உப்பு, பொரிக்க எண்ணெய்.
நெய்யைச் சூடாக்கி அரிசி மாவில் ஊற்றி, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். நான்கு பருப்புகளையும் கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். வடித்த பருப்புகளோடு பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து நன்றாகக் கலந்து சிறு வடைகளாகத் தட்டிப் பொரிக்கவும். தக்காளி கெட்ச்-அப்புடன் சூடாகப் பரிமாறவும்.
Post a Comment