சமையல் குறிப்புகள்! அரிசி மாவில் ·ப்ரூட் சாலட்
அரிசி மாவில் ·ப்ரூட் சாலட் பச்சரிசி - 1 கப், சாதம் 1 கப்புக்குக் குறைவாக, தேங்காய்த் துருவல் - 1/2 கப், சர்க்கரை - 1/3 கப், ·ப்ரூட் ஸாலட் -...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_72.html
அரிசி மாவில் ·ப்ரூட் சாலட்
பச்சரிசி - 1 கப், சாதம் 1 கப்புக்குக் குறைவாக,
தேங்காய்த் துருவல் - 1/2 கப்,
சர்க்கரை - 1/3 கப்,
·ப்ரூட் ஸாலட் - 1 தேக்கரண்டி, உப்பு.
அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். தேங்காயுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும். அரிசி, சாதம், உப்பு, சர்க்கரை இவற்றுடன் தேங்காய்ப் பால் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல்
அரைத்து 10-12 மணி நேரம் புளிக்க வைக்கவும். வார்ப்பதற்கு முன் இட்லிப் பானையில் தண்ணீரைக் கொதிக்க விடவும். ஒரு வட்டமான 9’’ பாத்திரத்தில் சதும்ப எண்ணெயைத் தடவவும். அதனைத் தண்ணீரில்
வைத்து சூடு ஏற்றவும். மாவில் ·ப்ரூட் சாலட் சேர்த்து அதன் மேல் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து நன்றாக 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபிறகு துண்டு போடவும். காரச் சட்னியுடன் பரிமாறவும்.
Post a Comment