எளிமையான முறையில் பாஸ்தா சமையல் குறிப்பு!
எளிய முறையில் பாஸ்தா செய்வதற்கான சமையல் குறிப்பு. தேவையான பொருட்கள் பாஸ்தா - 500 கிராம் சிக்கன்(எலும்பில்லாதது) - 200 கிராம்(விரு...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_3073.html
எளிய முறையில் பாஸ்தா செய்வதற்கான சமையல் குறிப்பு.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 500 கிராம்
சிக்கன்(எலும்பில்லாதது) - 200 கிராம்(விருப்பமெனில்)
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பிரொக்கோலி - 100 கிராம்
பச்சை குடமிளகாய் - 100 கிராம்
பச்சை பட்டாணி - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ்( பாஸ்தா சாஸ் ) - 50 கிராம்
பச்சை மிளகாய் - 1 (விருப்பமெனில்)
பூண்டு - 1 பல்(பொடியாக நறுக்கியது)
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 /2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 /2 தேக்கரண்டி
சீஸ் துருவியது - விருப்பமான அளவு
எண்ணெய் ( ஆலிவ் எண்ணெய் )
தண்ணீர் - பாஸ்தா வேக வைக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை
குடமிளகாயை 1 /2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம், கேரட், பீன்ஸ் ஆகியவற்றை 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் 1 /2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி குடமிளகாய், ப்ரோகலி இரண்டையும் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும். அரை வேக்காடாக வெந்தால் போதுமானது.
வதக்கியவற்றை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பும் சேர்த்து, மூடி போட்டு வேக விடவும்.
சிறிது தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் வரை வேக விடவும்.
காய்கறிகள் பாதி வெந்ததும், சிக்கன், உப்பு சேர்த்து வதக்கவும். அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து, சிக்கன் வேக வைக்க தேவையான தண்ணீரும் சேர்த்து வேக விடவும்.
சிக்கன் பாதி வெந்ததும் தக்காளி சாஸ் சேர்த்து கலந்து வேக விடவும். பின் அடுப்பை அணைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர்(பாஸ்தா வேக வைக்க) , சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாஸ்தா சேர்த்து வேக விடவும். பாஸ்தா நன்கு வேகும் வரை அவ்வொப்பொழுது கிளறி கொண்டிருக்க வேண்டும்.
பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு எடுத்து மசாலாவில் சேர்க்கவும். பாஸ்தா வேக வைத்த தண்ணீரில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது.
மீதமுள்ள தண்ணீரை வடித்து விட்டு பாஸ்தாவை தனியே எடுத்து வைக்கவும்.
வேக வைத்த பாஸ்தாவை, மசாலாவுடன் கலந்து 5 நிமிடங்கள் சூடு செய்யவும்.
பரிமாறுவதற்கு முன்பு பாஸ்தா மீது சீஸ் தூவி பரிமாறவும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.
Post a Comment