சமையல் குறிப்புகள்! வாழைப்பழ கோவா
வாழைப்பழ கோவா பால் - 1 லிட்டர், அரிசி (மெல்லிய வகை) - 3 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 கப், பழுத்த வாழைப்பழம் - 2. பிரஷர் குக்கரில் பாலை ஊற்றி...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_9309.html
வாழைப்பழ கோவா
பால் - 1 லிட்டர்,
அரிசி (மெல்லிய வகை) - 3 டேபிள் ஸ்பூன்,
வெல்லம் - 1 கப்,
பழுத்த வாழைப்பழம் - 2.
பிரஷர் குக்கரில் பாலை ஊற்றிக் கொதிவரும்போது, அரிசியைக் கழுவி அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மூடியைப் போட்டு வெயிட்டையும் போட்டு ‘சிம்’மில் 20 நிமிடங்கள் வேகவிடவும். விசிலுக்குக் காத்திருக்க வேண்டாம். அதற்குள் வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டவும். அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் வெல்லக் கரை சலை ஊற்றிக் கிளறவும். அதுவே கெட்டியாகிக் கொண்டு விடும்.அதில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும். வேறு எந்த வாசனைப் பொருள்களும் தேவையில்லை.
---------------------------------------------------------------------------------
Post a Comment