சமையல் குறிப்புகள்! பேரீச்சம்பழ பச்சடி
பேரீச்சம்பழ பச்சடி தக்காளி - 2, (தோல் உரித்துப் பொடியாக நறுக்கியது), பேரீச்சம் பழம் - 1/3 கப், கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது, புளி பேஸ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_5375.html
பேரீச்சம்பழ பச்சடி
தக்காளி - 2, (தோல் உரித்துப் பொடியாக நறுக்கியது),
பேரீச்சம் பழம் - 1/3 கப், கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கியது,
புளி பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - கீறியது 2,
தாளிக்க சிறிது எண்ணெய், கடுகு - 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் பொடி.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் புளி பேஸ்ட் 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க விடவும். அதில் பேரீச்சம் பழத்துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
---------------------------------------------------------------------------------------------------
Post a Comment