ரசிக்க ருசிக்க! ஜல் ஜீரா
ஜல் ஜீரா தேவையான பொருட்கள் சீரகம் - 4 டேபிள் ஸ்பூன் ஆய்ந்த புதினா இலைகள், கொத்தமல்லி தழை - 1 கப் (தலா) ஆம்ச்சூர் பொடி - 1 டீஸ்பூன் கறுப்ப...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_6045.html
ஜல் ஜீரா
தேவையான பொருட்கள்
சீரகம் - 4 டேபிள் ஸ்பூன்
ஆய்ந்த புதினா இலைகள், கொத்தமல்லி தழை - 1 கப் (தலா)
ஆம்ச்சூர் பொடி - 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீ ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
ஐஸ் தண்ணீர் - 8 கப்புகள்
அலங்கரிக்க
ஐஸ் கிïபுகள் - 8
புதினா இலைகள் - சிறிதளவு
செய்முறை
* வெறும் வாணலியில் மிதமான தீயில் சீரகத்தை நன்கு வாசனை வர வறுத்து, ஆறியதும் மிக்சியில் நைசாகப் பொடிக்கவும்.
* புதினா, கொத்தமல்லி இலைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் மைய அரைக்கவும். அரைத்த பின்னர் ஒரு உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.
* இதனுடன் சீரகப்பொடி, ஆம்ச்சூர் பொடி, கறுப்பு உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஐஸ் தண்ணீர் ஊற்றவும்.
* இப்போது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கவும்.
* கண்ணாடித் தம்ளர்களில் ஊற்றி மேலே புதினா இலைகள், ஐஸ் கிïபுகள் போட்டு பருகக் கொடுக்கலாம்.
* வெயிலை எதிர்கொள்ள ஆரோக்கியமும், குளிர்ச்சியும் நிறைந்த ஜல்ஜீரா தயார்.
------------------------------------------------------------------------------
Post a Comment