சமையல் குறிப்புகள்! பேல் பூரி
பேல் பூரி தேவையான பொருட்கள் பூரி துண்டுகள் நொறுக்கியது - 1 கப் சிப்ஸ் நொறுக்கியது - 1 /2 கப் பொரி - 2 கப் கேரட் துருவியது - 2...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_25.html
பேல் பூரி
தேவையான பொருட்கள்
பூரி துண்டுகள் நொறுக்கியது - 1 கப்
சிப்ஸ் நொறுக்கியது - 1 /2 கப்
பொரி - 2 கப்
கேரட் துருவியது - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 1 /2 மேசைக்கரண்டி
மாங்காய், வெள்ளரிக்காய் துருவியது - 1 1 /2 மேசைக்கரண்டி
மல்லிதழை நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
தக்காளி பொடியாக நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
சேவ்( ஓமப்பொடி) - 1 /2 கப்
தூள் உப்பு - 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
வேக வைத்த பட்டாணி அல்லது வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு - 1 1 /2 மேசைக்கரண்டி
இனிப்பு சட்னி - 3 மேசைக்கரண்டி
புதினா - 3 மேசைக்கரண்டி
பூண்டு சட்னி - 2 மேசைக்கரண்டி
உலர் மாங்காய் தூள் - 1 /4 தேக்கரண்டி
பூண்டு சட்னி
பூண்டு - 15 பல்
புளி - சிறிது
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
சேவ்(ஓமப்பொடி) செய்வதற்கு
கடலை மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் கலந்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
சேவ்(ஓமப்பொடி) அச்சைப் பயன்படுத்தி மாவைப் பிழிந்து சூடான எண்ணெயில் போட்டு மொறு மொறுப்பாகும் வரை பொரித்தெடுக்கவும்.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் நொறுக்கி வைத்துள்ள பூரி, சிப்ஸ், பொரி மற்றும் பாதி சேவ்(ஓமப்பொடி) ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
தயாராக வைத்துள்ள காய்கறிகள், தூள்கள் மற்றும் சட்னி அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும்.
மீதமுள்ள சேவ்(ஓமப்பொடி), பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி உடனடியாகப் பரிமாறவும்.
Post a Comment