மனதை மயக்கும் வெல்ல லட்டு
வெல்ல லட்டு தேவையானவை: கடலைமாவு & 2 கப், அரிசிமாவு & 2 டீஸ்பூன், எண்ணெய் & பொரிப்பதற்கு தேவையான அளவு, ஏலக்காய்தூள் & ஒரு ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8552.html
வெல்ல லட்டு
தேவையானவை:
கடலைமாவு & 2 கப்,
அரிசிமாவு & 2 டீஸ்பூன்,
எண்ணெய் & பொரிப்பதற்கு தேவையான அளவு,
ஏலக்காய்தூள் & ஒரு டீஸ்பூன்,
வெல்லம் & தேவையான அளவு (பூந்தி 2 கப் என்றால் தூளாக்கிய வெல்லம் முக்கால் கப் போதும்),
முந்திரிப்பருப்பு & 10,
உப்பு & ஒரு சிட்டிகை.
செய்முறை: கடலைமாவையும் அரிசிமாவையும் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, தண்ணீர் சேர்த்து சிறிது கெட்டியாக, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, பூந்திக் கரண்டியில் விட்டு, பூந்திகளாகப் பொரித்தெடுக்கவும். நெய்யில் வறுத்த முந்திரியையும் ஏலக்காய்தூளையும் பூந்தியில் சேர்க்கவும்.
மேலே சொன்ன அளவில் வெல்லத்தை எடுத்துக்கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு, கரைந்ததும் வடிகட்டி பாகு காய்ச்சவும். கெட்டிப்பாகு பதம் வந்ததும் (ஒரு துளி பாகை எடுத்து, தண்ணீரில் விட்டு, பிறகு எடுத்து உருட்டினால் உருட்டவரும். அதுதான் பதம்), பாகை இறக்கி பூந்தியில் விட்டு, கரண்டியினால் நன்றாகக் கலக்கவும். கை பொறுக்கும் சூட்டில், சிறிது அரிசிமாவைக் கையில் தொட்டுக்கொண்டு, சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும். இந்த வெல்ல லட்டை ரசிக்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது.. அந்தளவுக்கு சுவையாக இருக்கும்.
Post a Comment