செய்வது எளிது. சுவையோ அலாதி! சிரோட்டி
தென்னிந்திய சமையல்! சிரோட்டி தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப், சிரோட்டி ரவை (சன்னமாக இருக்கும்) - அரை கப், நெய், அரிசி மாவு - தலா 2 ட...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_1818.html
தென்னிந்திய சமையல்!
சிரோட்டி
தேவையான பொருட்கள்: மைதா மாவு - 2 கப், சிரோட்டி ரவை (சன்னமாக இருக்கும்) - அரை கப், நெய், அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை தூள் - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, ஆப்ப சோடா - 1 சிட்டிகை.
செய்முறை: மைதா மாவுடன் சிரோட்டி ரவை, சோடா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பூரி மாவு போல் பிசையுங்கள். நெய்யையும் அரிசி மாவையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிசைந்த மாவில் சிறு உருண்டை எடுத்து, சிறிய சப்பாத்தியாக இடுங்கள். அதன் மீது அரிசி மாவு கலவையை தடவி, மற்றொரு சப்பாத்தி இட்டு, அதன் மீது வைத்து, அதிலும் சிறிது அரிசி மாவு கலவையை தடவுங்கள். மீண்டும் ஒருமுறை இதே போல் ஓரடுக்கைச் செய்யுங்கள். இதை நன்கு இழுத்து பாய் சுருட்டுவது போல சுருட்டுங்கள்.
பிறகு, இதை சிறு துண்டுகளாக வெட்டி, சற்று மெல்லியதாக மடிப்புக் கலையாமல் நீள வாக்கில் திரட்டுங்கள்.
எண்ணெயை நிதானமான தீயில் காயவைத்து, திரட்டிய சப்பாத்தி துண்டுகளைப் போட்டு, மொறு மொறுப்பாகப் பொரித்து எடுத்து, இதன்மீது சர்க்கரைத் தூளை தூவுங்கள். ஆறியவுடன் டப்பாவில் அடுக்குங்கள். கர்நாடக மாநிலத்தின் மிக விசேஷமான இந்த இனிப்பை செய்வது எளிது. சுவையோ அலாதி!
-----------------------------------------------------------
Post a Comment