சமையல் குறிப்புகள்! பலவகை காய்களின் பிரட்டல்
பலவகை காய்களின் பிரட்டல் தேவையானவை: கேரட் & 2, உருளைக்கிழங்கு & 1, பச்சைப் பட்டாணி & கால் கப், பட்டர்பீன்ஸ் பயறு & கால் கப...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2266.html
பலவகை காய்களின் பிரட்டல்
தேவையானவை: கேரட் & 2, உருளைக்கிழங்கு & 1, பச்சைப் பட்டாணி & கால் கப், பட்டர்பீன்ஸ் பயறு & கால் கப், காலிஃப்ளவர் & 4 துண்டுகள், தக்காளி & 1, பெரிய வெங்காயம் & 1. தாளிக்க: எண்ணெய் & 6 டேபிள்ஸ்பூன், சோம்பு & அரை டீஸ்பூன். அரைக்க: காய்ந்த மிளகாய் & 12, சோம்பு & அரை டீஸ்பூன், சீரகம் & கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் & 4 டேபிள்ஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப.
செய்முறை: கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும். காலிஃப்ளவரை உப்பு சேர்த்த நீரில் போட்டு சுத்தம் செய்யவும். கேரட், பட்டாணி, பட்டர்பீன்ஸ் ஆகியவற்றை உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாதி வெந்துகொண்டிருக்கும்போது, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் ஆகியவற்றையும் சேர்த்து வேகவிட்டு, தண்ணீரை வடித்து விடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தாளித்து, வெங்காயம் + தக்காளியைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், வெந்த காய்களையும் சேர்த்து நன்கு கிளறி, சுருள வெந்ததும் இறக்கவும்.
சாதத்துக்கு மட்டுமல்ல, சப்பாத்தி, பூரி, பிரெட்டுக்கும் அருமையான ஜோடி இந்த பிரட்டல்.
Post a Comment