ரசிக்க ருசிக்க…! வெந்தய சூப்
வெந்தய சூப் தேவையான பொருட்கள் புளி-எலுமிச்சை அளவு உப்பு-தேவையான அளவு வெந்தயம் -கால் தேக்கரண்டி துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி மிளகாய் வற...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2983.html
வெந்தய சூப்
தேவையான பொருட்கள்
புளி-எலுமிச்சை அளவு
உப்பு-தேவையான அளவு
வெந்தயம் -கால் தேக்கரண்டி
துவரம் பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்-6
மிளகு -1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - ஒன்றரை தேக்கரண்டி
நல்லெண்ணெய்-1 தேக்கரண்டி
நெய்-1 தேக்கரண்டி
கடுகு-அரைக்கால் தேக்கரண்டி
பெருங்காயம்-சிறிது
செய்முறை
முதலில் புளியை நீரில் போட்டு கரைத்து புளி நீரின் தெளிவை 2 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உப்பைப் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். வெந்தயம், துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, தேங்காய்த்துருவல் இவற்றில் தேங்காய் துருவல் இல்லாமல் மீதியை நல்லெண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு, பிறகு தேங்காய்த் துருவலைச் சேர்த்து அம்மியில் வைத்து வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை சிறிதளவு நீரில் கரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் புளி நீரில் கொட்டி நன்றாக கலக்கி விடவும். கொத்துமல்லித்தழைகளைக் கிள்ளிப் போடவும். ஒரு கரண்டியில் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் இரண்டு கடுகு போட்டு தாளித்து சூப்பில் கொட்டவும். பெருங்காயத்தை நீரில் கரைத்து தெளிவை மட்டும் கொட்டி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
Post a Comment