பொடுகு வராமல் தடுக்க:மருத்துவ டிப்ஸ்,
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும் சின்ன ...

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை - 2 கைப்பிடி நல்ல மிளகு - 15-20 இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை குளித்தால் பொடுகுகில் இருந்து முடியை காப்பாற்றலாம்.
வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
நாட்டு மருத்துக்கடையில் கிடைக்கும் பொடுதலைத் தைலம், வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் தேய்த்து வரலாம்.
தேங்காய் பால் - 1/2 கப் எலுமிச்சை சாறு - 4 டீ ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளரும்.
இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.
Post a Comment