தர்பூசணி டிலைட்---சமையல் குறிப்புகள்,
தர்பூசணி டிலைட் தேவையானவை: தர்பூசணி (பொடியாக நறுக்கவும்) - ஒரு கப், தேங்காய் வழுக்கை (இளநீரில் இருப்பது. பொடிப்பொடியாக நறுக்கவும்...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_9872.html
தர்பூசணி டிலைட்
தேவையானவை: தர்பூசணி (பொடியாக நறுக்கவும்) - ஒரு கப், தேங்காய் வழுக்கை (இளநீரில் இருப்பது. பொடிப்பொடியாக நறுக்கவும்) - ஒரு கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் நீர் ஊற்றிக் கரைத்து, வடிகட்டி, தேங்காய்ப் பாலில் சேர்த்து, அடுப்பில் இளம் சூட்டில் வைத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும். சூடு ஆறியதும் இதனுடன் தர்பூசணி, தேங்காய் வழுக்கை, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து கூலாகவும் பரிமாறலாம்.
தர்பூசணி டிலைட்: தேங்காய்ப் பால் இல்லாவிட்டால், பால் சேர்த்தும் செய்யலாம்.
Post a Comment