முதுகு வலியா?---ஹெல்த் ஸ்பெஷல்,
நீண்ட நேரம், ஒரே இடத்தில் நிற்கும்படி நேர்ந்தால், ஒரு காலைத் தூக்கி பக்கத்தில் உயரமாக உள்ள திட்டு மீதோ, பெஞ்சு மீதோ வைத்து, நிற்க வேண்டும...

நீண்ட தூரம் கார் ஓட்டும் போது, அடிக்கடி சவுகரியமான இடத்தில் காரை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். காரின் இருக்கையை உங்களது கீழ் முதுகுக்குப் பின் வைத்துக் கொண்டு உட்கார வேண்டும். படுக்கும் போது, ஒரு பக்கமாக சாய்ந்து படுக்க வேண்டும். இடுப்பும், முழங்கால்களும் பின்புறம் வளைந்து இருக்க வேண்டும். முழங்காலுக்குக் கீழே, தலையணை வைத்துக் கொண்டு படுக்க வேண்டும்.
தூங்கி எழுந்திருக்கும் போது, முதுகுவலி இருந்தால், வழக்கமாக படுக்கும் படுக்கையில் படுக்காமல், தரையில் நான்கு அல்லது ஐந்து கம்பளிகளை விரித்துப் போட்டு, அதன் மீது படுத்து, சில நாட்கள் தூங்கிப் பார்க்க வேண்டும். அதனால், சவுகரியம் ஏற்பட்டு முதுகுவலி இல்லாவிட்டால், எப்போதும் திடமான படுக்கையில் படுத்து உறங்க வேண்டும்.
Post a Comment