தேங்காய் பால் உருளை கறி---சமையல் குறிப்புகள்
தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை...

https://pettagum.blogspot.com/2012/08/blog-post_29.html
தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.
அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

Post a Comment