மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில வகைகள் --உணவே மருந்து
மூட்டுவலி நீக்கும் தான்றிக்காய் துவையல் ப த்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மை...

பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது; முட்டி வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடை பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளில் சில வகைகள் இங்கே...
வெற்றிலை நெல்லி ரசம்
தேவையானவை: முழு நெல்லிக்காய் - 10, வெற்றிலை - 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 6 பல், வால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.
மருத்துவப் பயன்: குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை இடுக்கு ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதய நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. எலும்புப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தான்றிக்காய் துவையல்
தேவையானவை: தான்றிக்காய் - 10, எலுமிச்சை, காய்ந்த மிளகாய் - தலா 6, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 10 பல், மல்லி - 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, புதினா - தலா ஒரு கைப்பிடி, கருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
மருத்துவப் பயன்: கை, கால், உடல், மூட்டு வலியைப் போக்கும். மூட்டுகளில் உண்டாகக்கூடிய வீக்கத்தைக் குறைக்கும். மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு கைகண்ட மருந்து. மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு சம்பந்தமான கோளாறுகளையும் குணப்படுத்தும்.
மூங்கில் அரிசிக் கஞ்சி
தேவையானவை: மூங்கில் அரிசி, நொய் அரிசி - தலா 150 கிராம், சீரகம், ஓமம் - தலா அரைத் தேக்கரண்டி, பூண்டு - 6 பல், சுக்கு - ஒரு துண்டு, நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, மூட்டில் நீர் கோத்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும்.
Post a Comment