கொள்ளு குருமா--சமையல் குறிப்புகள்
கொள்ளு குருமா தேவையான பொருட்கள்: முளை கட்டிய கொள்ளு - 1 கப் பொடிய நறுக்கிய வெங்காயம் - 1 பொடிய நறுக்கிய தக்காளி ...

- முளை கட்டிய கொள்ளு - 1 கப்
- பொடிய நறுக்கிய வெங்காயம் - 1
- பொடிய நறுக்கிய தக்காளி - 2
- இஞ்சி,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மசித்த உருளைக்கிழங்கு - 1
- மிளகாய்த்தூள்- - 1 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
- கரம்மசாலா - 1 டீஸ்பூன்
- தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையானஅளவு
- எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
- அரைக்க:
- தேங்காய்(துருவியது) - 1/4 கப்
- முந்திரி - 6
- தாளிக்க:
- சோம்பு - 1 டீஸ்பூன்
- பிரிஞ்சிஇலை - 2
- அலங்கரிக்க:
- கொத்தமல்லித்தழை - சிறிது
- (1)பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு,பிரியாணி இலை
- சேர்த்து தாளிக்கவும்
- (2) இதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- (3) பின் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி நன்றாக குழைந்ததும் தூள் வகை எல்லாம் சேர்க்கவும்.
- (4)மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து 1/2கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
- (5) பின்பு கொள்ளை சேர்த்து வேகவிடவும்.
- (6)கொள்ளு வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
- (7)கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும்.
Post a Comment